பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

அனுமதி கேட்டான். கப்பல்களும், செலவு தொகையும் கேட்டான். அவனுடைய வற்புறுத்தலை மறுக்க முடியாமல் அரசரும் அரசியாரும் நான்காவது பயணம் மேற் கொள்ள அவனுக்கு அனுமதி வழங்கினார்கள். ஆனால், ஓவாண்டோ புறப்பட்டுச் சென்ற ஒரு மாதங் கழித்துத்தான் அவர்கள் இந்த அனுமதியை வழங்கினார்கள்.

கொலம்பஸ் தனது நான்காவது பயணத்தை மேற் கொண்டபோது அவனுக்கு வயது ஐம்பத்தொன்று. வயது அதிகமாகிவிட்டாலும், அப்போதும் அவன் ஒரு சிறந்த மாலுமியாகவே விளங்கினான். அலைகடல் அவனுக்கு விளையாட்டு நிலமாக இருந்தது; அஞ்சாமையும் உறுதியும் நிறைந்திருந்தன. கப்பல்களை நடத்திச் செல்லுவதில் அவன் இணையற்றவனாக விளங்கினான். ஆனால், அவனிடம் இருந்த ஒரே குறை நிர்வாகத் திறமையில்லாமையேயாகும். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். ஸ்பெயின் அரசாங்கத்தின் பொருளாளனாக இருந்தவன் தன் மைத்துனர் இருவரையும், கப்பல் தலைவர்களாக கூட அழைத்துச் செல்லவேண்டுமென்று கொலம்பசைககேட்டுக் கொண்டான். அவன் தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்கு கொலம்பசைக் கட்டாயப்படுத்தினான். கொலம்பசோ முன்பின் ஆராயாமல் அவர்களைக் கப்பல் தலைவர்களாக அமர்த்திக் கொண்டான். அவர்கள் அசகாய சூரர்கள்! கொலம்பஸ் சகோதரர்கள் மட்டும் அவர்களைக் காட்டிலும் வல்லவர்களாக இல்லாமல் இருந்திருந்தால், தாங்களே அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகக் கூறி விடக்கூடியவர்கள்.

கொலம்பஸ் தன் நான்காவது பயணத்தை நான்கு கப்பல்களுடன் தொடங்கினான். இந்த முறை அவனுடைய குறிக்கோள் கியூயாவுக்கும். பரியா மாநிலம் உள்ள கண்டத்திற்கும் இடையே ஒரு கடற் கால்வாய் வழியைக்