பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

தங்க வியாபாரத்திற்காக மீண்டும் கப்பல்கள் போர்ட்டோ பெல்லோவுக்குத் திரும்பி வந்தன. அங்கு காற்றும் மழையும் பலமாகப் பிடித்துக் கொண்டன. இங்கு கொலம்பஸ் பைபிளிலுள்ள புனித உபதேசங்களில் சிலவரிகளைப் படித்தவுடன் மழை நின்றுவிட்டதாம்.

பனாமாக் கால்வாய்ப் பகுதியில் உள்ள கிரிஸ்டோபல் துறைமுகத்தில் கிறிஸ்துமசும், 1503-ம் ஆண்டுப் பிறப்பும் கழிந்தன. ஆனால், அவை புத்துணர்ச்சியுடன் கொண்டாடப்படவில்லை. கொலம்பசுக்குப் பொறுமையிருந்திருந்தால் அப்போது பனாமாக் கால்வாயைக் கண்டுபிடித்திருக்க முடியும். ஆனால், அவன் அப்போது அலுத்துக் களைத்துப் போயிருந்ததால், அந்தப் பகுதியைச் சுற்றி ஆராய முற்படவில்லை. ஆகவே, அவன் நான்காவது பயணம் புறப்பட்டுச் சென்ற நோக்கம் சிறிதும் நிறைவேறாமலே போயிற்று.

மேல்திசை வழியாகத் திரும்பத் தொடங்கிய கொலம்பஸ், தங்கம் நிறையக் கிடைக்கக் கூடிய ஓரிடத்தைக் கண்டுபிடித்து வாணிய நிலையமாக்கவேண்டும் என்று எண்ணினான். வெராகுலா ஆற்றங்கரைப் பகுதியில் ஆற்றின் முகவாயில் அருகில் இருந்த ஒரு குன்றிருந்த இடத்தை அவன் நகரமாக்கத் திட்டமிட்டான். அந்த இடம் மிக அழகாக இருந்தது. அதன் அழகில் மயங்கியே கொலம்பஸ் வாணிப நிலையமாக்க எண்ணினான். பெலன் என்ற இடத்தில் ஸ்பானியர்கள் கோட்டை கட்டித் தங்கலானார்கள்.

அந்தப் பகுதியின் சிவப்பு இந்தியத் தலைவன் குயிபியன் என்பவன் முதலில் நட்பாகத்தான் இருந்தான், தன் ஆட்களோடு வந்து கொலம்பசின் கப்பலில் விருந்துண்டு சென்றான். ஆனால், ஸ்பானியர்கள் அங்கேயே நிலையாகத் தங்க முடிவுகட்டி விட்டார்கள் என்றவுடனே அவன் பலவழி-

கொ–9