பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

களில் தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டான். அதன் பின் அந்தப் பகுதியில் வெள்ளையர்கள் உயிரோடு இருப்பதே அரிதாகத் தோன்றியது. கடைசியில் பல தொல்லைகளுக்குப் பின், பல ஸ்பானியர்களைப் பலிகொடுத்தபின் கொலம்பஸ் அந்த இடத்னத விட்டு விட்டுப் புறப்பட முடிவு கட்டினான்.

1503-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத் துவக்கத்தில் பெலன் பகுதியை வீட்டுப் புறப்பட்ட கொலம்பஸ் சாண்டா டோமிங்கா சென்று கப்பல்களைப் பழுது பார்த்துக் கொண்டு போக எண்ணினான். கொலம்பஸ் தன் அனுபவத்தின் துணையால், சாண்டா டோமிங்கோவிற்கு விரைவாகப் போய்ச் சேரக்கூடிய வழியில் கப்பலைச் செலுத்தினான். கீழைக் காற்றுகளைச் சமாளித்துப் போவது எளிதல்ல. ஆசுவே, கரையோரமாகவே சென்று இஸ்பானியோலாவின் தென்பகுதியை அடைய வேண்டும் என்று திட்டமிட்டான்.

ஆனால், மற்ற கப்பல் தலைவர்கள், முன்பின் தெரியாத முறையில் கப்பலைச் செலுத்திக்கொண்டு போக விரும்பவில்லை. வழியில் கொலம்பசைச் சூழ்ந்துகொண்டு வட திசையில் கப்பலைத் திருப்பும்படி கட்டாயப்படுத்திக் தொந்தரவு கொடுத்தார்கள்.

கப்பல்கள் மிகவும் ஓட்டையாகி விட்டன. ஓட்டைகளின் வழியாகத் தண்ணீர் கப்பல்களுக்குள் புகுந்து கொண்டேயிருந்தது. மாலுமிகள் அல்லும் பகலும் குழாய்களின் மூலம் தண்ணீரை வெளியேற்றிக்கொண்டே யிருந்தார்கள்.

எப்படியெப்படிப் பட்ட தொல்லைகளை யெல்லாமோ அனுபவித்துக்கொண்டு ஜூன் 25-ம் நாள் ஜமைக்காவில்