பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

அங்கிருந்து மரக்கலங்களின் மூலமாக ஐரோப்பிய நாடுகளை யடையும். இவ்வாறு இந்தச் சரக்குகள் பல வணிகர்களின் கை மாறிப் பல மாதங்கள் கடந்து ஐரோப்பாவைப் போய்ச் சேரும். இதனால் அந்தப் பொருள்களின் விலை நூறு மடங்காக ஏறிவிடும். இவ்வாறு சுற்று வழியாக வந்து சேரும் சரக்குகளை நேரடியாக அவை விளையும் இடத்திலேயே போய் வாங்கினால் மிக மலிவாக வாங்கிவிடலாம் என்ற எண்ணமிருந்தது. தவிர, செல்வங்கொழிக்கும் இந்த நாடுகளில் சிலவற்றைத் தங்கள் ஆதிக்கத்திற்குட்படுத்திக் கொண்டால், வாணிபத்தை மேலும் இலாபத்தோடு செய்யலாம் என்ற எண்ணமும் மேல் நாட்டார் பலருக்கும் இருந்தது. போர்ச்சுக்கீசிய அரசர்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வந்து இந்தியாவை அடையும் வழியொன்றைக் கண்டுபிடிப்பதற்காகப் பலமுறை முயற்சி எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இந்த வழி சுற்றுவழி என்றும், நேராக மேற்கு நோக்கிச் சென்று குறுகிய வழியில் கீழ் நாடுகளை அடைவது தான் எளிய வழியென்றும் கொலம்பஸ் எண்ணினான். ஐரோப்பாவின் மேற்குக் கரையிலிருந்து புறப்பட்டால் ஜப்பானின் கிழக்குக் கரையிலே வந்து கப்பல் நிற்கும் என்றும், இடையிலே எவ்விதமான நிலப்பகுதியும் கிடையாதென்றும் தான் அக்காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அமெரிக்காக் கண்டம் என்பதாக ஒன்று இருக்கும் செய்தி அக்காலத்தில் யாருக்குமே தெரியாது.

கொலம்பஸ் காலத்தில் பிளாரன்ஸ் நகரத்தில் ஒரு ஞானி யிருந்தார். அவர் பெயர் பாவோலோ டோஸ்கானெலி. அவர் மருத்துவத் துறையில் பெரிய வல்லுநர். அத்தோடு வான நூலும், கணித நூலும் அவருக்குத் தண்ணீர் பட்டபாடு. 1471-ம் ஆண்டில் அவர் தம் போர்ச்சுக்கீசிய நண்பர் ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். போர்ச்சுக்கீசிய அரசரை மேற்கு நோக்கி ஜப்பானுக்குக் கப்பல் அனுப்ப ஊக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில்