பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அவர் எதையும் சரியாக மனத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. அவர் கருத்தைக் கவர முடியாமல் அவன் திரும்பி விட்டான். அங்கிருந்து அவர் பிரான்சு தேசம் சென்றான். பிரெஞ்சு அரசர் எட்டாவது சார்லஸின் சகோதரர் அன்விடி பீஜோவின் அன்பைப் பெற்றான் பார்த்தலோமியோ கொலம்பஸ். அவன் சில நிலப் படங்கள் எழுதித் தரும் வேலையை அவனிடம் ஒப்படைத்தார். அவர் மூலமாகப் பிரெஞ்சு அரசரின் நட்பைப் பெற்றான். ஆனால், திட்டம்தான் அவரிடமும் பலிக்கவில்லை. விஷயத்தை விளக்கிக் கடிதம் போட்டுவிட்டு பார்த்தலோமியோ கொலம்பஸ் பிரான்சிலேயே தங்கி விட்டான்.

முயற்சிகள் எதுவும் பலிக்காமல் மனம் நொந்து போன கொலம்பஸ் எப்படித்தான் காலம் கழித்தானோ? எவ்வளவு நொந்து போன உள்ளத்துடன் வாழ்ந்தானோ? அவன் ஸ்பெயினுக்குத் திரும்பிவந்த செய்தியறிந்த இசபெல்லா தன்னை சந்திக்கும்படி கட்டளையிட்டாள். அப்போது ஸ்பெயின் அரசாங்கம் மூர் இனத்தாருடன் போரிட்டுக் கொண்டிருந்தது. மூர்கள் நகரான பாஜாவுக்கு வெளிப்புறத்தில் கூடாரமடித்துத் தங்கியிருந்தாள் அரசி இசபெல்லா. கொலம்பஸ் அங்கு வந்து சேருவதற்கு வழியில் எல்லா வசதிகளும் செய்து கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஒரு பொது உத்தரவுக் கடிதம் எழுதி அதைக் கொலம்பசுக்கு அனுப்பியிருந்தாள். அங்கு வந்து சேர்ந்த கொலம்பஸ், சண்டையில் ஒரு சிப்பாயாக சேவகம் செய்யத் தவறவில்லை.

1490-ம் ஆண்டு டாலவெராக் குழுவினர் கூடி விவாதித்து, கொலம்பஸ், திட்டம் பயனற்றது என்று முடிவு கட்டினார்கள். மேற்கு நோக்கிச் சென்று கிழக்கையடைலாம் என்ற கொள்கையே நடைமுறைக் கொவ்வாததென்று