பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

அனைத்திலும் பரப்பப்பட்டன. ஒரு பிரதி ரோம் நகருக்கு ஏப்ரல் மாதம் 18- ம் நாள் போய்ச்சேர்ந்தது.

செய்தி பரவவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் அது அச்சிடப்படவில்லை. அக்காலத்தில் ஐரோப்பிய நாட்டரசர்கள் புதிய நிலங்களைக் கண்டுபிடித்துத் தங்கள் ஆட்சியில் இணைத்துக் கொள்வதில் மும்முரமாயிருந்தார்கள். தாங்கள் கண்டுபிடித்த நாடுகள் தங்கள் உடைமை என்று நிலைநாட்ட இப்படிப்பட்ட சான்றுகள் இன்றியமையாதவையாய் இருந்தன. இந்தியத் தீவுகளில் ஸ்பெயினுக்குள்ள ஆதிக்கத்தை நிலைநாட்டவே இவ்வறிக்கை அச்சிட்டுப் பரப்பப்பட்டது.

கொலம்பஸ் அறிக்கை இலத்தீன் மொழியிலும் பெயர்த்தெழுதப் பெற்று அச்சிட்டுப் பரப்பப்பட்டது.

கொலம்பஸ் இரண்டாவது முறையாகத் தன் பயணத்தைத் துவக்க இருந்தபொழுது அவன் புகழ் எங்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் முதியவர்களும் அவனுடன் புறப்படத் தயாராயிருந்தனர். தங்கங் கிடைக்கும் தீவுகளுக்குச் சென்று தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளப் போட்டி போட்டுக் கொண்டு பலர் முன்வந்தனர். முதலில் ஆள் கிடைக்காமல் சிறையில் இருந்த கைதிகளைக் கூட விடுவித்துத் தன்னுடன் அழைத்துச் சென்ற கொலம்பஸ் இப்போது யாரைத் தன்னுடன் அழைத்துச்செல்வது என்று தேர்ந்தெடுக்கவேண்டிய நிலையில் இருந்தான்.

1498 ம் ஆண்டு மே மாத இறுதியில் பேரரசரும் பேரரசியும் கொலம்பசுக்கு, குடியேற்ற நாட்டில் என்னென்ன செய்ய வேண்டும் என்று குறிப்புக்கள் வகுத்துக் கொடுத்தார்கள். இஸ்பானியோலாவை, வாணிகக் குடியேற்ற நாடாக்கும் அவனுடைய, திட்டத்துக்கு அவர்கள் அனுமதி