பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அவள் அம்மணிப்பாட்டியிடம் சென்று அதைப்பற்றி அவளுடைய கருத்தைக் கேட்டாள். அம்மணிப்பாட்டி சும்மா தலையை அசைத்தாள்; அவள் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை குமாரிடமிருந்து கடிதம் வருவதற்குச் சில சமயங்களில் வெகுநாள் ஆயிற்று. ஜூடி பொறுத்துக் கொள்ளவேண்டும். பொறுமையாக இருக்கப் பழகுவது கல்லது. மழை மெதுவாக கின்றுவிட்டது. வெப்பம் குறைக் திருப்பதையும் பிசுபிசுப்பு மட்டமாக இருப்பதையும் ஜூடி திடிரென்று உணர்ந்தாள். ஆரஞ்சுப் பழம் கிடைக்கும் பருவம் தொடங்கிவிட்டது. மாம்பழம் இல்லாததற்கு அது பெரும்பாலும் ஈடுசெய்தது. பலவகையான ஆரஞ்சுகள் கிடைத்தன. தோல் கெட்டியானதும், சுவை மிக்கது மான ஆரஞ்சுப் பழங்களும், தோல் கெட்டியற்றதும், ரசம் கிறைந்ததும், இனிப்பு மிகுந்ததுமான பழங்களும், வேறு புளிப்பு வகையான பழங்களும் இருந்தன. சாலேகளிலே வெள்ளம் உண்டாக்கிய குழிகளைச் செப்பனிடத் தொடங்கி ஞர்கள். தோட்டத்தில் இருந்த புல்லின் அடிக்கட்டைகள் செம்மண்ணை மறைத்து உயர்ந்து வளர்ந்தன. நீளமான ஒரு கத்தியைக் கொண்டு வீசி அவற்றைத் தோட்டக்காரன் செதுக்கிக் கொண்டேயிருந்தான். அனைவருக்கும் உற் சாகம் மிகுந்தது. கோடைகாலம் முடிவடைந்தது. நீச்சல் குளம் கலங்கலாகவும் தழைகள் கிறைந்து மிருந்தது. அதைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அதனுல் கொஞ்ச நாள் அதில் நீக்த முடியாமற்போயிற்று. சுருமீன்களிருப்பதால் கடலில் குளிக்கக்கூடாது என்று ஜூடியின் தாய் ஒரே கண்டிப்பாகக் கூறிவிட்டாள். ஆளுல் சுரு:மீன் யாரையும் விழுங்கியதாகவோ, கடித்ததாகவோ காளுேம். மீன் பிடிப்பவர்கள் சிறுசிறு கட்டுமரங்களில்