பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 யாகவும் இருந்தது. அப்பொழுதுதான் திறக்கும் சிறு கடைகளையும், மாட்டு வண்டிகளையும், வேலைக்காக கடந்து வரும் மக்களையும் கடந்து சென்னையை விட்டு அவர்கள் சென்ருர்கள். பட்டனத்தை அவர்கள் கடந்துவிட்டார்கள். இருபக்கங்களிலும் வயல்கள் தோன்றின. நீண்ட கோடை மாதங்களிலெல்லாம் வரண்டு, பசையற்றும் கிடங்த வயல்கள் இப்பொழுது மழையின் உதவியால் கிடைத்த வண்டல் மண்ணிலும் தேங்கிய தண்ணிரிலும் கட்ட கெற் பயிரின் அழகான பசுமை ஒளி போர்த்து விளங்கின. வரப்புகளால் பிரிக்கப்பட்ட அந்த வயல்கள் சிலவற்றில் ஆண்களும், பெண்களும் தண்ணிருக்குள் கடந்து சென்று சிறு கட்டுக்களாக உள்ள கெல் காற்றுக்களே கடவு கட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சில வயல்களில் அப்பொழுதே கெற்பயிர் அடர்த்தியாக வளர்ந்திருந்தது. இங்கிலாந்திலே வசந்த காலத்தில் இருப்பதைவிட இங்கு மைல் கணக்காக ஒரே பசுமையாக இருந்தது. சில சமங்களில் அவர்கள் மழையால் உண்டான ஆழமற்ற ஆளுல் அகன்ற குளங் களைக் கடந்து சென்ருர்கள். சிவந்த தண்ணிலே அமைதி யான நீல வானம் பிரதிபலிப்பதால் ஆச்சரியமான ஒரு புது நீல வர்ணம் தோன்றிற்று. கருவேல மரங்களின் அடி மரத்தைச் சுற்றிலும் அந்தக் குளங்களிலுள்ள தண்ணிர் மோதிக் கொண்டிருந்தது. பயிர்களுக்குப் பாய்ச்சுவதற் காகக் குளங்களில் அணைகட்டியிருந்தனர். அவற்றின் கரையோரங்களில் சிறுசிேறு பூச்செடிகள்: வளர்ந்திருந்தன. அங்குமிங்கும் கரும்பு வயல்கள் தென்பட்டன. மக்களே வேலை செய்து கரும்புச் சாற்றைப் பிழியக் கட்டிய எளிய உருளைஇயந்திரங்களைச் சில கிராமங்களில் ஜூடி கண்டாள். ஆனல் தொலைவில் உள்ள ஓரிடத்தில் கரும்புத் தொழிற் சாலை ஒன்று இருந்தது. கரும்பை ஏற்றிக்கொண்டு சில வண்டிகள் அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.