பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அவர்களுக்கு ஹிந்தி சொல்லிக் கொடுக்க அவள் முயற்சி செய்யவில்லை. மிகவும் திறமை வாய்ந்தவர்களுக்காவது ஏதாவது ஒரு சமயத்தில் அதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆளுல் ஹிந்தியைப் பற்றி அவளுக்கு அத்தனை கிச்சயம் இருந்ததா? ஹிந்தியும், வட இந்தியாவும்? அவள் கற்றுக்கொடுப்பதெல்லாம் தமிழில்தான். இப்பொழுது யாருக்கு அதிகமாகக் கற்றுக்கொடுக்கவேண்டிய தேவை இருக்கிறதோ அப்படிப்பட்ட திறமை குறைந்தவர்களிடம் அவள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். காட்டிய வகுப்புக்கு இன்னும் கொஞ்சம் சங்கீதக் காரர்களின் உதவி மட்டும் கிடைத்தால்! அந்தக் குருடன் மிருதங்கம் வாசிப்பதற்குப் போதும். ஆனல் அவனே எப்பொழுதும் பக்குவமாக வைத்திருக்கவேண்டும். அவள் விரும்பியதை அவன் சில சமயங்களில் வாசிக்கமாட்டான். தான்தான் முக்கியமானவன் என்ற உணர்ச்சி அவனுக்கு. எல்லோரும் காட்டிய வகுப்பைப் பெரிதும் விரும்பிஞர்கள். முக்கியமாக இளஞ்சிறுமிகளுக்கு அது மிகவும் பிடித்தது. அவர்களுடைய தாய்மார்கள் வந்து தரையின் மேல் அமைதியாக அமர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். மழைக்காலத்திற்குப் பிறகு வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்ட பிறகுதான் காட்டிய வகுப்புத் தொடங்கிற்று. *பின்னணியிசை இல்லாவிட்டாலும் அவள் தனது காட் டியப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யவேண்டும், அது பின்னுல் ஒரு நாளுக்கு வேண்டியிருக்கும்’ என்று அவள் தங்தை கூறியிராவிட்டால் அவள் காட்டிய வகுப்பையே தொடங்கியிருக்கமாட்டாள்-என்று இவ்வாறு லட்சுமி எண்ணமிட்டாள். தானே காட்டியம் ஆடுவதைவிடக் குழந்தைகளுக்கு காட்டியம் சொல்லிக்கொடுக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு உதயமாயிற்று. அவள் தங்தையும்