பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R76 வழியாகவும் வேகமாக அழைத்துச் சென்றனர். உண்மை யான மாரிக்காலம் அல்லது வசந்த காலத்தின் முதற்பகுதி போலக் கால கிலே இருந்தது. மக்கள் கோட்டும் கால் சட்டையும் அணிந்து கொண்டோ அல்லது கம்பளங்களே ஒன்றின் மேல் ஒன்று போர்த்துக்கொண்டோ இருந்தனர். வித்தை காட்டுகின்ற கரடியோடு ஒரு ம னி த ன் தோன்றின்ை. பாவம், அழுக்குப்படிந்த கரடி அது. ஆனல் அதற்கு உடம்பெல்லாம் ரோமப்போர்வையாவது இருந்தது. ஜூடியின் தந்தை மாகாட்டில் கலந்து கொண்டிருந்த சமயத்தில், சுற்றிப் பார்ப்பதற்காக ஜூடியை அழைத்துச் சென்றனர். ராவ் குடும்பத்திலே பல குழந்தைகள் இருந்தார் கள்; மூத்த குழந்தைகளெல்லாம் பள்ளியிலே ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்தனர். பிறருடன் பழகுவதில் முதலில் தோன்றும் காணம் விட்டுப்போனவுடன் அவர்கள் ஜூடி யுடன் வெகுவாகப் பேசினர்; ஆளுல் அவர்கள் எப்பொழு தும் ஆங்கிலத்தில் பேசினர். ஹிந்தியில் பேசவேயில்லை. தோற்றத்தில் தந்தையைப்போலவே இருக்கும் திலீப் என்ற பைய ன் ஒருவனும், இந்திரா என்ற பெண் ஒருத்தியும் இருங் தனர். அவர்கள் இருவரும் டாக்டர்கள் ஆகவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தனர்; ஆனுல் அதற்கு வேண்டிய தனிப் பயிற்சியை அவர்கள் இன்னும் தொடங்கவில்லை. பெரும்பாலும் கால்பந்து விளையாட்டிலேயே விருப்பம் கொண்டிருந்த இளைய பையன் ஒருவனும் இருந்தான். அவர் களுடைய வீட்டுத் தோட்டத்திலே நல்ல புல்வெளி ஒன்றும், பூப்பாத்திகளும் இருந்தன. ஆங்கில நாட்டிலே வேனிற் காலத்தில் மலரும் பலவகையான மலர்கள் அங்கே தோன்றத் தொடங்கியிருந்தன. டாலியா, பெட்டுனியா ஆகிய மலர்கள் கொத்துக்கொத்தாக விரைவிலே அங்கு மலரும். வனப்புமிக்க கொண்டலாத்திப் பறவைகள் தங்கள்