பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அப்பொழுதுதான் கதிர்விடத் தொடங்கியிருந்தது. துவ ரைச்செடிகள் அல்லது பட்டாணிச்செடிகள் பல ஏக்கர் கிலத்திலே அடர்த்தியாக வளர்ந்திருந்தன. கிராமங்களிலே செங்கல்லால் உறுதியாகக் கட்டப்பட்ட வீடுகள் காணப் பட்டன. இங்கே குளிர் அதிகமாகையால் தென்னங்கீற்று பயன்படாது. எங்கும் மரங்களும் அதிகமாக இருந்தன. கிராமங்களிலே சில இடங்களில் வெட்டி அடுக்கிய மரங் களும் காணப்பட்டன. பஸ் கிற்கும் ஓரிடத்திலே அவள் தங்தையின் கண்ப ரான காட்டு அதிகாரி காத்திருந்தார். கறுத்தும் மெலிந்தும் இருந்த அவர் அவர்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த வராகத் தோன்றினர். அவரும் தென் காட்டிலிருந்து வங் தவர். சென்னையைப் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொள்ள அவர் விரும்பினுர். மலையின் அடிவாரத்திற்கு அவர்கள் காரில் சென்றனர். அகன்ற இலைகளையுடைய அழகிய மரங்கள் உள்ள ஒரு காட்டின் வழியாகவும் சென் றனர். 'சால மரங்கள் எல்லாம் இயல்பாக வளர்ந்திருக் கின்றன. ஆனல் நாங்கள் உண்டாக்கிய தேக்கு மரங்களே நீங்கள் பார்க்க வேண்டும்’ என்று அந்தக் காட்டு அதிகாரி மொழிந்தாா. மரங்களும் புதர்களும் உள்ள பெரிய தோட்டத்தின் மத்தியில் அவருடைய மாளிகை இருந்தது. பெரும்பா லான மரங்கள் இன்னும் பூக்கவில்லை. ஆனல் செக்கிறமாக வும், தடிப்பாகவும் உள்ள பெரிய மலர்களோடு ஒரு இலவ மரம் காணப்பட்டது. அதிலிருந்து தொப்தொப்பென்று மலர்கள் விழுந்துகொண்டிருந்தன. பறவைகள் அவற்றை எப்பொழுதும் கொத்திக் கொண்டிருப்பதை ஜூடி பின்னல் கவனித்தாள், மாளிகைக்குள் முக்கியமானதாக இருந்த அறையில் செங்கல்லால் கட்டிய கனப்பு அடுப்பிலே கல்ல