பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} % கடக்கும். நானும் கெளரவம் பாராமல் ஜூடிக்குக் கடிதம் எழுதி அவள் தங்தை உடனடிய க சரஸ்வதியைக் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்." அந்தக் கடிதத்தைத்தான் டெல்லியிலிருந்து திரும்பிய ஜூடி கண்டாள். இரவு விமானத்தில் திரும்பியபின் கன்ருகக் காலே உணவை அருந்திருக் கொண்டிருக்கும் பொழுது அவள் அதைப் படித்தாள். பப்பாளிப்பழம் எலுமிச்சம்பழம், பொரித்த முட்டை, கொய்யாப்பழம் எல்லாம் இருந்தன. டெல்லிக் கொய்யாப்பழத்தைப்போல இது அவ்வளவு பெரிதாகவும் சுவையாகவும் இல்லை. டெல்லி மிகவும் குளிராக இருந்ததைப் பற்றியும், யானையைப் பற்றி யும், ஒட்டகத்தின் வினுேதமான முகத்தைப் பற்றியும் அவள் தன் தாயிடம் விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்தாள். அதனுல் கொஞ்ச நேரத்திற்கு லட்சுமியின் கடிதம் எவ்வளவு முக்கியமானது என்பதை அவள் உணரவில்லை. லட்சுமி உற்சாகமான முறையில் கடிதத்தைத் தொடங்கி, சரஸ்வதி யைப் பற்றிய முக்கியமான பகுதியைப் பின்னுல்தான் எழுதியிருந்தாள். ஜூடி அக்கடிதத்தைத் தன் தந்தையிடம் கொடுத்தாள். அவர் காப்பி அருந்துவதை கிறுத்தி விட்டுப் புருவத்தை நெரித்துக்கொண்டு இந்தியாவின் சுகாதார ஏற்பாடுகளைப்பற்றி முணுமுணுக்கத் தொடங் கினர். அந்தச் சமயத்தில் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று அம்மணிப்பாட்டி அங்கு வந்து ஜூடியின் தந்தைக்கும், தாய்க்கும் நமஸ்காரம் செய்தாள். ஜூடியின் தாய் அவளுக்கு ஒரு கோப்பையில் காப்பி வழங்கி விட்டு, ஓரளவு திகைப்போடு கால கிலேமையைப்பற்றி பேசத் தொடங் கினுள். ஆனல் ஜூடி, "இப்பொழுதுதான் கடிதம் வந்ததுஅவர்கள் வந்துவிட்டார்களா?’ என்று கேட்டாள்,