பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37

கடந்த பற்றுதல் கொள்ளமாட்டாள் ; ஆனால் லட்சுமி மற்றவர்களைப் போலல்ல; அவள் வேருனவள், வளையல்களே அவள் கையில் அணிந்துகொள்வதையோ அல்லது அவள் காட்டியத்திலே ஒரு அடி எடுத்து வைப்பதையோ பார்த்தால், காட்டிலே மான்குட்டியைப் பார்ப்பதுபோலிருக்கும். சில வேளைகளில் அவள் ஜூடியின் தலையிலே மலர்களைச் சூடுவாள். இளஞ்சிவப்பான நல்ல அழகிய ரோஜாப் பூக்களையே பெரும்பாலும் அவள் வைத்தாள். உதிர்ந்து விடும் வரையில் ஜூடி அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டிருப்பாள்.

வேலிக்குப் பின்புறத்திலே உள்ள குடும்பம் இப்படி அன்போடு இருப்பதைக் கண்டு ஜூடியின் தாய் சற்று ஆச்சரியமடைந்தாள். பெஞ்சமினும் ஜூடியும் அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதிருக்கும் வரையில் வேலியிலுள்ள சந்து அப்படியே இருக்கலாம் என்று அவள் சம்மதித்தாள். “என்ன இந்தாலும் நாம் வெள்ளை நிறத்தவர்கள். பெரும்பான்மையான இந்தியர்கள் நம்மிடத்திலே மிகவும் பிரியமாகவே இருக்கிறார்கள். கடந்துபோன சில சம்பவங்களை எண்ணிப் பார்த்தால் ஒரு வேளை நம் தகுதிக்கு மேலாகவே......” என்று ஜூடியின் தாய் கூறினாள்.

“நல்ல விஷயங்கள் பலவற்றை நாம் கொண்டு வங்திருக்கிறோம். விஞ்ஞானம், மருத்துவம், திருத்தமாகச் செய்தல், காலந்தவறாமை, நவீன வழியிலே விஷயங்களை நோக்கல்... ...” என்று அவள் தந்தை மொழிந்தார்.

ஜூடிக்கு இது மனப்பாடம். இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷாரைப் பற்றிச் சாதகமாகவும் பாதகமாகவும் அவளுடைய தாய்தந்தையர் எவ்வாறு பேசத் தொடங்கு வார்களென்பதும் அவளுக்குத் தெரியும். பள்ளிக்கூடத்திலே