பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

பெரிய ஆலமரம் ஜூடிக்குப் பிடித்தமான இடங்களிலொன்று. அது மிகப் பழமையான மரம். பரந்து செல்லும் அதன் கிளைகளிலிருந்து சுற்றிலும் தரையிலே விழுதுகள் இறங்கிச் சில ஆண்டுகளுக்குள் சிறுசிறு அடி மரங்களாவதற்கு அங்கு வசதி செய்திருந்தார்கள். வீதியில் உள்ள ஆலமரங்களும் இவ்வாறே விழுதுகளை விட்டன. ஆனால் அந்த விழுதுகள் தரையில் இறங்குவதற்குமுன் மாடுகளும் ஆடுகளும் அவற்றைத் தின்று விட்டன. ஆனால் அடையாற்றில் உள்ள பெரிய ஆலமரம் ஆண்டாண்டாகப் பரவி வளர்ந்து ஓர் ஆலமரத் தோப்பாகவே ஆகிவிட்டது. அவற்றையெல்லாம் தூண்களாகவும் வளைவுகளாகவும் ஒன்றோடொன்று சேர்த்திருந்தார்கள். சில அடிமரங்களைத் தொற்றிக்கொண்டு கொடிகள் படர்ந்திருந்தன. எப்பொழுதும் நூற்றுக்கணக்கான பறவைகள் அங்கே தங்கியிருந்தன. அழகான சிறிய அணில்கள் தலைகீழாகவும் வேறு கிளைகளிலும் சுலபமாகத் தழைகளுக்கிடையே துள்ளி ஓடின. வீட்டில் செய்யவேண்டிய பள்ளி வேலைகளை எடுத்துக்கொண்டு ஜூடி அங்கே போனால் அவளால் வேலை செய்யவே முடியாது.

தொந்தரவு என்னவென்றால் எத்தனையோ பேர் அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்க விரும்பினார்கள். இத்தனை அதிகமான மக்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் இல்லாமலிருந்தால் ல்லது என்று அவள் சிந்தனை செய்வாள். வாடிய முகங்களையும், கைகளையும், மெலிந்த கால்களையும் பார்த்துச் சலித்துப் போய்விட்டது. அந்தோ: அந்தப் பிச்சைக்காரர்கள்; மெளண்ட் ரோடிலுள்ள கடைகளில் எதற்குப் போனாலும் அதற்கு முன்னால் டஜன் கணக்கில் பிச்சைக்காரர்கள் காத்திருப்பார்கள். “தாயில்லை தகப்பனுமில்லை” என்று கூவி அழுவார்கள். அவர்கள்