பக்கம்:கடல் முத்து.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கடல் முத்து இந்தச் சென்மத்திலே நான் ஒப்பவே ஏலாது அப்படின்னு: நீ ஒங்க வீட்டிலே சத்தியம் பறையப்போக, உனக்கும் நம்ம கோடித் தெரு அயன் பணக்காரப் புள்ளி ஆதிமூலஞ்சேர்வை தலைச்சன் மகன் மாணிக்கத்துக்கும் முகூர்த்தம் நடத்தவும் முடிவு செஞ்ச தாக்கல் தகவல் என் காதுக்கு விழுந்ததுதான், என்னுேட தப்பு என் புத்தியிலே உறைச்சுது; மேனி முழுக்க எரிஞ்சுது! என் நெஞ்சிலேயும் நினைப்பிலேயும் அல்லும் பகலும் இம்மாங்காலமாய் விளையாடிக்கிட்டு இருந்த நீ... வாரக்கிழமையிலே எவனே அயலான் ஒருத்தனுக்கு வாக்கப் பட்டு முந்தானை விரிக்கப்போறியே என்கிற நிசமான சங்கதியை என்னலே தாங்கிக்கிடவே முடியல்லே! ஆகச்சே, உன்னேட இன்ப நினைப்பிலேயே நான் எம்புட்டு உசிரைப் போக்கிக்கிடவும் முடிவுகட்டி, கொஞ்சமுந்தி இங்கிட்டு வந்து ஆலமரத்துக் கிளையிலே சுருக்குப் போட்டுக்கிட ஆயத்தப் பட்ட வேளையிலேதான், தெய்வாதீனமாய் வெடிச்ச மின் வெட்டிலே உன்னை, மரக்கிளையிலே தொங்கிக்கிட்டிருந்த உன்னேக் கண்டேன்! ஏலே, புள்ளே! எல்லாமே நல்லதுக்குத் தான் இப்படி ஏடாகூடமா நடந்திருக்குமோ, என்னமோ? என்னை நம்பு, பவளப் பொண்னே! நீ கெட்டுப் போயிருக்க லாம்! ஆனலும், உண்மையிலேயே நீ உன்னையும் மீறி எவனே ஈவிரக்கமத்த பாவி ஒருத்தனலே வலுக்கட்டாயமாகக் கெடுக்கப்பட்டிருக்கே! ஆதாலே, நீ பாவம் திண்டாத சுத்த மான கன்னிக் கொழுந்துதானக்கும்! இந்தச் சத்தியத்தை நான் சொல்லல்லே! நம்ம சாமி, காந்திச்சாமி சொல்லியிருக் காகளாக்கும்! ஏ, புள்ளே...! கண்ணைத் துடைச்சுக்கிட்டு நிமிர்ந்து நில்லு! இப்பவே ஆத்தா ராக்காச்சியை சாட்சி வச்சு உனக்குத் திருப்பூட்டி உன்னை எம் பொஞ்சாதியாய் ஆக்கிடுவேன்! இது ஆத்தா மேலே இடுகிற ஆணே! ஆமா, புள்ளே, ஆமா! உணர்ச்சிவசப்பட்ட நிலையிலே, நா தழுதழுக்கவும், கண்ணிர் பூச்சிதறவும் பேசினன் அவன். . அவன் சக்திவேல் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/101&oldid=764945" இலிருந்து மீள்விக்கப்பட்டது