பக்கம்:கடல் முத்து.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$94. கடல் முத்து யாய்க் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிப் போட்டு, இப்பு கூத்தா அடிக்கிறே கூத்து! இந்தப் பாதிக் கிழிசல் துவாலையாலே என்னே கண்ணு, கை, வாய் அல்லாத்தையும் முழுக்கக் கட்டிப் போட்டுப்புட்டு என்னைப் பதம் பார்த்துப்பூட்டது இந்த ரெண்டு கையுந்தானே?...ஏ கண்ணைத் தொறந் துக்கிடு வாயைத் தொறந்து பேசுடா, காவாலிப் பயலே!’ என்று கொக்கரித்தவளாகத் தீப்பொறி பறந்த கண்களால் அவனைச் சுட்டெரிக்க முனைந்த வண்ணம் சக்திவேவின் கைகள் இரண்டையும், ரத்தத் தழும்புகள் நிலவில் சிரித்த கைகள் இரண்டையும் உடும்புப் பிடியாகப் பற்றிப் பற்களால் மாறி மாறிக் கடித்தாள். ஈவிரக்கமத்துப் போயிட்ட பேய் மிருகமே! எனக்கும் ஒன்னைவிடவும் காந்திச் சாமியைத் தெரியும்டா! அதாலேதாண்டா ஒன்னை இப்படிக் குதறினே ளுக்கும்! ஓங்காரமாய்க் கூவியபடி, இடுப்பில் செருகியிருந்த வீச்சரிவாளே எடுத்தாள். டேய்! நான் எப்பவோ செத்து போயிட்டேண்டா! ஆளுக்கா, நீ இனிமேத்தான் சாகப் போற1 ஆமாடா இது சத்தியம்டா மனுசத்தனமே இல் லாமப் போய்ட்ட ஒன்னே என்ன செய்யுறேன், பார்த்துக் கடா !' பத்ரகாளியாக உருக்கொண்டு மூர்த்தண்யமான வெறிமூளக் கையிலிருந்த வீச்சரிவாளைச் சக்திவேலைக் குறி வைத்து ஓங்கிளுள் அவள்! அதே சடுதியிலே... "ஐயையோ! தெய்வமே! என் தெய்வமே! நான் பாவி தான்! நான் பாவியேதான்! ஆத்தாளே, என்னை நீ சமிச்சு எனக்கு மா ப் பு க் கொடுக்கமாட்டே, கொடுக்கவும் வேண்டாம்! எனக்கு உண்டான தண்டனையை நானே கொடுத்துக்கிடுவேன்! இது மெய்யாக்கும்!" கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு கூக்குரல் பரப்பிய வாறு, பவளக்கொடியின் தேவதைப் பாதங்களிலே நெடுஞ் சாண்கிடையாகச் சரண் அடைந்தான். அவன் சக்திவேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/103&oldid=764947" இலிருந்து மீள்விக்கப்பட்டது