பக்கம்:கடல் முத்து.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான் ஒரு இந்தியனன! 星伊夏 கொடி மற்றும் காந்தி மகாத்மாவின் படங்கள் சட்டைப் பையில் இப்போதும் உறுத்தவே செய்கின்றன. . . ஊம்! சாயா வந்தது. பைசா போனது. ரயிலுக்குக்கூட பூங்குயிலாகக் கூவத் தெரிகிறது. அவன் இப்போது நல்ல மூச்சு விட்டான். சென்னைக்கும் கொச்சிக்குமாக எத்தனை தரம்தான் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து கொண்டிருப்பான் அவன்! விடிந்தால், எல்லாமே விடிந்துவிடும்! அசலான விதியைப் போலவே, அந்நியமான அவனுக்கும் சிரிக்கத் தெரியும். நேரங்கெட்ட அந் நேரத்தில் அவன் மறுபடி எழுத்துக்காரன் ஆன்ை. சிருஷ்டியின் கர்வம் அவன் நெஞ்சிலும் நினைவிலும் ஆலப்புழைப் பச்சை ரக ஏலக்காயின் மணத்தைக் கூட்டுகிறது! நினைவுகள் சிரிக்கவே. சுற்றிச் சூழ விழிகளைச் சுழலவிடுகிருன் அவன். இருந்திருந்தாற்போல், அவனிடம் ஒரு பதற்றம் மிஞ்சியது. அவன் அமர்ந்திருந்த பலகைக்கு அடியிலே கிடந்த அந்த முரட்டு மனிதனை அவன் மறந்துவிட மாட்டான்; மிதித்து விடவும் மாட்டான்! ஆஹா! யார், அந்தப் பூவை . . .? ஒ...! பூலோக ரம்பையாகத்தான் இருக்க வேண்டும். அவள் தான் உறங்குகிருள்; ஆனால், அவள் அழகு உறங்கவில்லையே! நல்ல பருவம்: நல்ல வயது. சேர நல்நாட்டு இளம்பெண் அல்லவா? தமிழ்ப் பெண்மை குலுங்க, அடக்க ஒடுக்கமாகச் சாய்ந்து கிடந்தாள். அவளுடைய மார்போடு மார்பாக அணைந்து கிடந்த ஆண்குட்டி உறக்கக் கிறக்கத்தில் பாலமுதம் பருகிடத் துடிக்கிறது; தவிக்கிறது. பட்டு மேனி யில் பட்டும் படாமலும் ஆடிவரும் தேகைத் தவழ்ந்து கிடந்த "முண்டு ரொம்பவும் கெட்டிதான். மதி!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/110&oldid=764955" இலிருந்து மீள்விக்கப்பட்டது