பக்கம்:கடல் முத்து.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடந்த அரை நூற்ருண்டு காலமாகத் தம்முடைய பல படைப்புகளின்மூலம் தமிழ் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதிவரும் மூத்த எழுத்தாளரான பூவை எஸ். ஆறுமுகம் அவர்கள் பொன்னி, உமா ஆகிய இதழ் களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இளம் எழுத்தாளர்கள் பலரை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும், புகழ்வாய்ந்த எழுத்தாளர்களிடம் நேர் காணல் நிகழ்ச்சிகள் நடத்தி, அவற்றைத் தொடர் கட்டுரை களாக வெளியிட்ட சிறப்பும் அவருக்கு உண்டு. நாற்பதாண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய கடல் முத்து. போன்ற சிறந்த கதைகள் இத்தொகுப்பின்மூலம் இப்போது வாசகர்களிடம் மறு அறிமுகம் பெறுகின்றன. KADAL MUTHU by PoovAI S. ARUMUGAM வில் ரூ. 2600 இந்தியாவில் மட்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/136&oldid=764983" இலிருந்து மீள்விக்கப்பட்டது