பக்கம்:கடல் முத்து.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடல் முத்து
9

தெரியாது. மாசிமலைத் தேவனுக்கு எங்கிட்டே என்ன வயித் தெரிச்சலோ? முகம் நிமிர்ந்து அவரை ஒண்ணுக்கு ரெண்டு தடவைகூடப் பார்த்ததில்லையே? ஊம்——′

பவளக்கொடி.புத்துயிர் பெற்ள்; மறு வாழ்வு பெற்றாள். கன்னக் கதுப்பெழிலில் நாணம் குமிழியிட்டு மின்னியது: கரு வண்டுக் கண்களில் இன்ப வேதனையிருந்தது. அவள் மார்பகம் ஒரு கணம் விம்மித் தணிந்தது. குமுதம் மலர்ந்தது; அங்கே தண்மதி மடலவிழ்ந்திருத்தான். வண்டு கானம் இழைத்தது; அங்கே மலர்மது காட்சி தந்தது.

பவளக்கொடி புதுமை பெற்றாள், அங்கே நடேசன் முறுவலித்து நின்றிருந்தான்!

‘என்ன, நடேசன் வந்துட்டான? வந்து என் பவளக்கொடிக்குத் தாலியும் கட்டிப்புட்டானா?’ என்று கர்ஜித்தான் மாசிமலைத்தேவன்.

பண்ணையாள் கூறிய விவரம் தேவனின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டது. கூடப்பிறந்த அக்காளாக இருந்தும்கூடத் தனக்குப் பவளக்கொடியைத் திருமணம் முடித்து வைக்க வில்லையே என்று ஆத்திரப்பட்டான் கிழவியின்மேல். அக்குடும்பத்தை ஒழித்துவிடவேண்டுமென்ற ஒரே நோக்கமே தேவனின் மனதில் வைரம் பாய்ந்தது.

‘என்ன அகங்காரம் நேற்றுப் பிறந்த பயல்: வக்கத்த அனாதைப் பயல் நடேசன் என் சொத்தைத் திருடிக்கிட்டானா: பார்க்கலாம், அவங்க ரெண்டுபேரும் எப்படி ஜோடியா இருக்காங்கண்ணு?’

அடுத்த நிமிஷம் தேவன் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். மேற்கண்ட விஷ விதை அவனது வைர நெஞ்சில் சக்தியாகப் பரிணமித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/18&oldid=1181845" இலிருந்து மீள்விக்கப்பட்டது