பக்கம்:கடல் முத்து.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தங்கச்சி
17

 தோளாகப் பழகிவிட்டது போன்ற சிநேகம் ஏற்பட்டது அவ்விருவரிடையிலும்.

அவனும் நாடோடிதானாம். அம்மா மட்டும்தான் இருக்கின்றார்களாம். தள்ளாத வயது: கண் பார்வைகூட கெட்டுவிட்டதாம். ஒரு மைல் தூரத்திலிருக்கும் சத்திரத்தில்தான் அவர்கள் இரண்டு பேரும் தங்கியிருக்கிறார்களாம்.

‘அப்படின்ன கண்ணாலம்——’

அதேசமயம் வள்ளியின் முகம் அவன் கண்முன் ஒருகணம் தோன்றி மறைந்தது.

‘வேறே ஒருத்தரும் இல்லியா?’

‘என்ன அப்படிக் கேக்கிறீங்க?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டான் புதிய ஆள்.

‘கண்ணாலம்——’

‘பூ, இதுக்குத்தானா இப்படிச் சுத்தி வளைச்சு என்னென்னமோ கேக்கிறீங்க? பிச்சைக்காரப் பிழைப்பிலே கண்ணாலத்தைப்பற்றி நெனச்சாச் சாத்தியப்படுமா? ஆனா, அம்மாவுக்கு உசிரு இருக்கும்போதே யாராச்சும் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவிடணும்னு இருக்கு. பெத்த மனசு பாருங்க! பொண்ணுக்கு எங்கே போறது?′

‘இம்பிட்டுத் தங்கமான குணமிருக்கிற ஆளுக்கு வள்ளியைக் கட்டிக் கொடுத்தா அப்புறம் மனசிலே கவலையே இல்லை’ என்று நினைத்தான் செல்லையா.

எனக்கு ஒரே ஒரு தங்கச்சி இருக்குது. அதை நம்ப மாதிரி நல்ல மனுசனுக்குக் கொடுத்துப்பிட்டா மனசு நிம்மதியா இருக்கும். அதுக்குப் புருசனைத் தேடிக்கிட்டுத் தான் இருக்கேன். அது அளகைப்பத்தி ரொம்பச் சொன்னா நல்லாயிராது. ஒங்களுக்குத் தங்கச்சியை...!’

செல்லையா சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது அந்தப் புதிய ஆளின் முகம் மலர்ந்துவருவதையும் கவனித்துக் கொண்டேதான் இருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/26&oldid=1191465" இலிருந்து மீள்விக்கப்பட்டது