பக்கம்:கடல் முத்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டி டுங்கும் நுரையுமாகக் குமிழியிட்டுச் சென்றிருந்த காவேரியின் புதுவெள்ளப் பூரிப்பில் மனம்விட்டு லயித்திருந்த அவள் காற்றில் கலந்துவந்த குழல் ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். நினைத்தபடி முத்தையனைக் காண வில்லை. குணவதிக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. வழக்க மாக வரும் அந்த ஒற்றையடிப் பாதையை மீண்டும் ஒருமுறை நோக்கிள்ை. செடி மறைவிலிருந்து மெல்ல எழுந்த முத்தை யனைக் கண்டவுடன் குணவதிக்குச் சந்தோஷம் எல்லே கடந்தது. தன்னை வழக்கம்போல ஏமாற்றி வேடிக்கை பார்க்கவே இப்படிச் செய்திருக்கிருன் முத்தையன் என்பதை அறிந்த குணவதி, சுய கெளரவத்தை விட்டுக்கொடுக்க விரும்பாதவள்போல மறுபடியும் அலைபாய்ந்து ஓடிக்கொண் டிருந்த புதுப்புனலின் பரப்பில் கால்களைப் பதித்து விளையாட ஆரம்பித்தாள். ஏலே குணவதி.” குழைந்த அக்குரலின் மோகனநாதம் அவளை என்ன செய்ததோ? சற்றுமுன் கொண்ட திட வைராக்கியம் எங்கு ஒடி ஒளிந்ததோ? மெதுவாகத் தலையைத் திருப்பிப் புன் னகை பூத்தாள், தன் எதிரே ஒயிலுடன் நின்றுகொண் டிருந்த முத்தையனைப் பார்த்து. ஆனல் மறு விடிை அவ ளுடைய மலர்ந்த முகம் குவியக்கண்ட முத்தையன், கார ணம் ஒன்றும் விளங்காதவளுய்க் கதிகலங்கினன். குணவதி எம்மேலே கோவமா ஒனக் கு? ஏதுக்கு இப்படித் திடீர்னு ஒன் முகம் மாறிடுச்சு? - 'மச்சான், ஒங்களுக்கு விசயமே தெரியாதாங்காட்டியும்? ஆளு செத்தான பொளேச்சானங்கற சேதிகூட இம்பிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/38&oldid=765009" இலிருந்து மீள்விக்கப்பட்டது