பக்கம்:கடல் முத்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டி s1 உனக்கு இருந்தா அதுவே போதும். மறு பேச்சாடாமல் மாரியைத்தானே கண்ணுலம் வார்த்தைகளை முடிப்பதற்குள் குணவதி இடைமறித்து, "மச்சான் வெந்த புண்ணிலே வேலிடவா வேணும்? இவ் வளவு வருசமாப் பழகியுங்கூடக் குணவதியை நீங்க புரிஞ்சுக் கலையா? மொறப்பொண்ணுமில்லே மொறைப்பொண்ணு, அன்னிக்கு அப்பாரு சாகக் கிடக்கிறப்போ ஒரு உதவி ஒத்தாசை செய்யத் துப்பில்லை. அன்னிக்கு விட்டுப்போன சொந்தம் இப்ப எப்பிடிப் புதுசா முளைச்சுதாம்? மச்சான், ஒரு யோசனை தோணுது. மூளும்பேருக்குத் தெரியாம ராவோடு ராவா கண்டிச் சீமைப் பக்கம் ஒடிடலாமே...' என்று பதட்டமாகக் கேட்டாள். -

  • குணவதி, அவுங்களுக்குப் பயந்து ஏதுக்கு ஒடனும்? உன் அன்பு எம்மேலே உள்ளவரைக்கும் அதுவே எனக்குப் பத்து ஆளு பலத்தைக் கொடுக்கும்! பார்த்துக்கலாம்-’ என்று ஆத்திரத்தோடு மொழிந்த முத்தையனேக் கண்டதும் குணகதி ஆச்சரியப்பட்டாள். - -

குணவதி, ஏந்திரு. மஞ்சள் வெய்யல் மறையறதுக் குள்ளே ஒரு ஒட்டம் படகிலே போயிட்டுவரலாம்.' மறுமலர்ச்சியடைந்தவர்களைப் போன்று குனவதியும் முத்தையனும் படகைத் தள்ளினர்கள். காவேரியின் அன் பணப்பில் மிதந்தது. பரிசல்: - அடுத்த நாள்-! நொந்த மனத்துடன் தெருவில் போய்க்கொண்டிருந் தான் முத்தையன். அவன் கண்களை அவளுல் நம்ப முடிய வில்லை. தெருக்கூத்தில் வரும் ராஜபார்ட் மாதிரி உடை யணிந்து குஷாலாக வந்துகொண்டிருந்தான் மேஸ்திரி மகன் மாரி. குணவதிக்குப் போட்டியிடும் அவனே க் கண்ட முத்தையனுக்கு நெஞ்சு படபடத்தது. மேலும் அன்று. குணவதியின் தாய் சொன்ன விஷயங்களும் நினைவுக்கு வந்தன. - - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/40&oldid=765012" இலிருந்து மீள்விக்கப்பட்டது