பக்கம்:கடல் முத்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கடல் முத்து விவரம் தெரிந்த நாள் முதலாக முத்தையனும் குணவதி யும் அன்னியோன்யமாகப் பழகி வந்திருக்கின்றனர். அந்நாள் தொட்டே குணவதி முத்தையனுக்குத்தான் என்று திட்ட மிட்டாள் குணவதியின் தாய். தந்தை தாயற்ற தன் பேரில் தனித்து பரிவுகாட்டும் அக்குடும்பத்தில் முத்திையனுக்கு இனம்தெரியாத பாசம் ஏற்பட்டதில் வியப்பில்லேதான். சாகேரியை அடுத்திருந்தது குடியிருப்பு. அதற்கெல்லாம் மேஸ் திரிதான் த லே க் கட்டு. கொஞ்சம் பசையான பேர்வழி. பணப் புழக்கம் குலுங்கும் இடம். அப்புறம் கேட்பானேன்? மேஸ்திரி மகன் மாரி நாலைந்து வருஷங் களுக்கு முன் பர்மா போயிருந்தான். அவனைப்பற்றி அன்று வரை யாதொரு தகவலும் கிடைக்காததால் மேஸ்திரியும் குணவதி விஷயத்தில் ஒன்றும் குறுக்கிடவில்லை. ஆளுல் குணவதியும் முத்தையனும் என்ருே கைபிடித்த தம்பதி களாக வேண்டியவர்கள். அதுவேதான் வயதான குனவதி யின் அம்மா கண்டுவந்த கனவும் ஆகும். எதற்கும் காலமும் வேளேயும் கூடிவர வேண்டாமா?

  • முத்து அண்ணே
  • வா மாரி, இப்பத்தான் ஒன்னை நெனச்சேன், ஆயுசு நூறு' என்று மேல் பூச்சாக ஏதோ பேசிளுன் முத்தையன்.

"குணவதியை எம்மகனுக்குக் கட்டிக்கொடுக்காட்டி அப்பறம் ஒரு கை பார்த்துக்கலாம்’-என்று மேஸ்திரி எச்சரித்த விஷயமும் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. "அண்ணே, ஒன்னைக் கண்டு சேதி பேசத்தான் ஒடியாந் தேன். தேடிப்போன மூலிகை காலிலே சிக்கின கதையா நீயே குறுக்கே வந்துப்புட்டெ, விசயம் அல்லாம் புரிஞ்சுக்கிட் டேன். அத்தைமவள், குணவதியைக் கட்டிக்க வேண்டியது நான். ஆன அதுக்குப் போட்டியா நீ இருக்கே. இப்ப எல்லாருமாக் கூடி ஒரு முடிவு கட்டியிருக்கோம். அதாவது நம்ப காவேரியிலே கோடி முக்கம் வரைக்கும் நாம்ப ரெண்டு பேரும் பரிசல் ஒட்டி அதிலே யாரு முதலிலே வந்து செயிக் கிருங்களோ அவனுக்குத்தான் குணவதி. நல்லா யோசிச்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/41&oldid=765013" இலிருந்து மீள்விக்கப்பட்டது