பக்கம்:கடல் முத்து.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டி - 37 "மச்சான்!” - ஆச்சரியம் தொனிக்க ஆர்வத்துடன் அலட்டினுள். குணவதி, அன்னிக்கு நானும் மாரியும் பந்தயம் வச்சிக் கிறதா ஒப்பந்தம் கட்டினேமில்லையா? அதெல்லாம் அந்தப் பயம்வன் மாரி செஞ்சிருக்கிற கபடம். இப்பத்தான் ஒவ் வொண்ணுத் துப்பு துலங்குது; விடிஞ்சதும் தானே படகுப் பந்தயம். அப்ப நான் படகு ஒட்டத் தொடங்கினதும் என்னை அப்படியே நடுத் தண்ணியிலேயே படகைக் கவிழ்த் துத் தள்ளி ஆளை முடிச்சுப்பிடத் திட்டம் போட்டிருக்கா ளும்; அப்பறம் ஒன்னே வலுக்கட்டாயமாக் கண்ணுலம் பண்ணிக்கிற முடிவாம்...' என்று நிறுத்தி மேற்கொண்டு அவள் காதில் ஏதோ மெதுவாகக் கூறிஞன் முத்தையன். குணவதிக்கு முகமலர்ச்சி ஏற்பட்டது. தான் கண்ட பொல் லாத சொப்பனத்துக்கும் இப்போது மச்சான் சொல்லும் சமாச்சாரத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதுபோலத் தோன்றிற்று அவளுக்கு. - ‘சாமி கிருபையாலே இந்த மட்டும் உயிர் தப்பினது புண்ணியந்தான்' என்று நினைத்துக்கொண்டாள் குணவதி. அடுத்த நாள் உச்சிப்பொழுது. அன்றுதான் குறிப்பிட்டபடி முத்தையனும் மாரியும் பந்தயம் வைத்துக்கொண்ட தினம்! வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த மாரி குணவதியின் குடிசையின் முன் வந்து அலட்டினன். குணவதி வரவில்லை. அதற்குப் பதில் அவள் தாய் தள்ளாடிய வண்ணம் வெளியே வந்தாள். • ? 'அத்தை குணவதி எங்கே?- என்று கேட்டான் மாரி. கிழவிக்கு ஆத்திரம் பொங்கியது. கோபம் ரெளத்திர காரமாக வந்தது. - - "மாரி, குணவதியையா தேடறே அம்பிட்டுப் பாசத் தோடே போதும்; நீயும் ஒங்க அப்பனும் எங்களைச் சாதிச் சது, ஒங்க வஞ்சகமும் சூதும் எங்களுக்குப் புரியாம இல்லே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/46&oldid=765018" இலிருந்து மீள்விக்கப்பட்டது