பக்கம்:கடல் முத்து.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

塞母 கடல் முத்து தன் புதல்வியின் அறிவைக் காணச் சிங்காரத்துக்கும் அழவேண்டும்போலிருந்தது. ஆகட்டும் கண்ணு' என்று சொல்லிச் சரட்டைக் கழற்ற நெருங்கிளுன் அவன். வேறு வழி? அதே சமயம், மேஸ்திரி எசமான்! உங்க மகள் கமலா வைப் பாம்பு கடிச்சு ரொம்பத் தடபுடலா இருக்குங்க!” என்று ஓடிவந்து சொன்னன் வேலைக்காரப் பையன். அவ்வளவுதான்! மேஸ்திரிக்கு உலகமே சுற்றியது: கை கால்கள் நடுங்கின. தன் குழந்தை ஆசை காட்டி அழகு காட்டி மனத்தை மகிழச் செய்த நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக மனத் திரையில் விரிந்தோடின. மகளின் வதனத்தில் ஆசை கொண்ட மட்டும் பதித்த அன்பு முத்தங்களை ஒவ்வொன்ருக நினைவுபடுத்திப் பார்த்தார். ஒரு திமிஷம் பயங்கர நினைவுகள் அவரை வாட்டி எடுத்தன. மந்தரித்து எந்த விஷக் கடியையும் போக்குவதில் சிங்காரம் மிகவும் பிரக்யாதி பெற்றவன் என்ற எண்ணம் மின்னல் போல மேஸ்திரியின் மனத்தில் உதித்தது, மகள் உயிர் சிங்காரத்தின் கையிலேதான் இருக்குது; அவன் மனசு வச்சாக் கமலாவை உயிரோடே காணலாம். ஆளு கொஞ்ச முந்தி தயவு தாட்சண்யமின்றிப் பேசின எனக்கு அவன் இரக்கப்படுவான பகவானே! எனத் தன்னுள் நினைத்துப் பார்த்த மேஸ்திரி, அப்போதுதான் சிங்காரம் அவன் மகளின் மீது கொண்டிருக்கும் பாசத்தை உணர்ந்தார். தனக்கு வந்தால் அல்லவா தெரியும் தலைவலியும் காய்ச்சலும்! அவனைக் கடிந்து சரட்டைக் கழற்றிக் கொடுக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தியதற்குத் தண்டனையாக இச்சம்பவம் நேர்ந்திருக்குமோ என்றுகூட நினைக்கலாஞர். - - மேஸ்திரி ஐயா. இந்தாங்க சரடு: கடனுக்கு வச்சுக் குங்க! எதுக்கு இப்படி மலேச்சுப் போய் நிக்கிறீங்க? வாங்க உங்க வீட்டுக்கு. பாம்பு விஷத்தை மந்திரிச்சுக் கண் "சிமிட்டிற நேரத்திலே தணிச்சிடறேன்!” என்ருன் சிங்காரம் பதட்டத்துடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/57&oldid=765030" இலிருந்து மீள்விக்கப்பட்டது