பக்கம்:கடல் முத்து.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகை .* பிரபல சினிமா நட்சத்திரம் மாயா நிலைக்கண்ணுடியின் முன் நின்று விழுங்கும் விழிகளால் ஒருமுறை தன் அழகின் பூரணத்துவத்தின் எல்லையைக் கணக்கிடுவதுபோல ஏறிட்டு நோக்கினள். மை திட்டப்பட்ட வில் புருவங்களின் மத்தியில் ஒளி உமிழ்ந்த திலகமும், சிருங்காரம் கொப்பளிக்கப் புட்டாமா பூசியிருந்த வதனத்திடையே மிளிர்ந்த உதட்டுச் சாயமும் அவள் மனதிற்கு அன்று நிரம்பவும் பிடித்திருந்தன. இடையில் மின்னிய ஒட்டியாணத்தைச் சிறிது தளர்த்தினுள். போதையூட்டும் ரீதியில் அவள் மேலாடை சற்றே நெகிழ, கவர்ச்சி கனிந்தது. தயாராக நின்ற காரில் ஏறிக்கொண்ட மிஸ் மாயா ஸ்டுடியோவை அடைந்ததும் அவளே வரவேற்க இன்முகங் காட்டி ஒடி வந்தார் டைரக்டர் சந்திரமெளலி. டைரக்டர் ஸார், ரொம்ப டைம் ஆகிவிட்டதுபோல் இருக்கிறது. கோபமில்லையே! டிரஸ்ஸிங்கில் இன்று கொஞ்சம் அதிகப்படியான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்று தன் இதழ்களில் புன்னகை மலர் தூவிக் குழையும் குரலில் சொல்லிவிட்டு, வெண்ணிலவு சிதறும் நெற்றியில் முத்து முத்தாகப் பூத் திருந்த நீர்த்துளிகளைத் துடைத்துக்கொண்டாள் மாயா. "பரவாயில்லை மாயா, உன் வரவிற்குத்தான் எல்லோரும் அப்போதிருந்தே காத்திருக்கின்றனர்."அன்னபூமி’ படத்தில் உன்ஏே ஒன்'வெற்றிக்குத் தங்கள் சந்தோஷத்தை நேரிலேயே சமர்ப்பித்துப் போக ஆசைப்பட்டுத்தான் ரசிகர்களும், அபிமானிகளும் கூடியுள்ளார்கள் என்று சொல்லி, மாயா வின் பூங்கரங்களைப் பற்றியபடி உள்ளே நுழைந்தார் டைரக்டர்; சிகரெட்டின் பின்னல் புகை.உயர்ந்த்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/60&oldid=765034" இலிருந்து மீள்விக்கப்பட்டது