பக்கம்:கடல் முத்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 கடல் முத்து இருவரையும் ஜோடியாகக் கண்டவுடன் காத்திருந்த வர்களின் முகங்கள் சந்தோஷத்தால் மலர்ந்தன. டின்னர்' தொடங்கியது. பிரசித்தி வாய்ந்த நடிகை மிஸ் மாயாவின் முழு ஜெயத்திற்குத் தங்கள் உள்ளக் களிப்பைத் தெரிவித்துக் கொண்டதுடன், அன்புப் பரிசுகள் பலவற்றையும் வழங்கினர். டின்னர் முடிந்தது. மாயாவை நேரில் பேட்டி கண்டுகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது பெரிய அதிர்ஷ்டம் எனக் கருதியவர்கள் போன்று ரசிகர் குழாம் கலந்தது. அன்றைய மாலை நிகழ்ச்சி பூராவையும் கண்ட அவளுக்கு அனைத்தும் ஒரு கனவு போலவேதான் தோற்றம் கொடுத்தது. மாயாவின் மார்பகம் ஒருகணம் விம்மித் தாழ, ஆழ்ந்த பெருமூச்செறிந்தாள். அப்புறம் அதிக நேரம் டைரக்டரும் மாயாவும் அள வளாவிப் பேசி மகிழ்ந்தனர் என்பதற்கு அத்தாட்சியாகக் கட்டியங் கூறுவது மாதிரி தரையில் சிதறிக் கிடந்தன சிகரெட் துண்டுகள் பல. அவர்களுடைய இழை பின்னிக் கிடந்த மோன நிலையைக் கலைத்தது சுவர்க் கடிகாரம். மாயா விடை பெற்றுக்கொண்டாள். சந்திரமெளலி அவளைப் பிரியா மனத்துடன் வழியனுப்பி வைத்தார். திரைப்பட உலகில் ஈடுசோடில்லாத ஓர் சிறந்த சினிமா ராணி மாயா. வயதும் வாலிபமும் சந்திக்கும் வளம் கொழிக்கும் பருவம். இளமை அவள் கோமளமேனிக்குப் புது மெருகிட்டது. சங்கீதம், நடிப்பு, செளந்தர்யம் அவ வரிடம் சங்கமித்திருக்கையில் சினிமா வானில் பிரத்தியேக ஸ்தானத்தை அவள் ஸ்வீகரித்துக்கொண்டதில் வியப்பில்லை தான். ஆனல் மிஸ் மாயா ஒரு காலத்தில்-அதாவது இரண்டு வருஷங்களுக்கு முன்-சர்வ சாதாரணமான வெறும் கோகிலமாகவே இருந்து வந்தாள். இளமைதொட்டே சினிமா என்ருல் அவளுக்குப் பிராணன். புதிது புதிதாக ரிலீஸ் செய்யப்படும் படங்களின் தராதரத்தை எடை போட்டுச் சீர்தூக்கும் க்ரிடிக்'கின் பண்பாடு அவளிடம் அப்போதிருந்தே அடைக்கலம் புகுந்திருந்தது. இத்தகைய நிலையில் எப்படியும் சினிமாவில் சேர்ந்துவிட வேண்டுமென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/61&oldid=765035" இலிருந்து மீள்விக்கப்பட்டது