பக்கம்:கடல் முத்து.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடிகை 53 ஆதுரம் மட்டும் அவள் இதய அந்தரங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் தூங்கிக் கிடந்தது. அதே சமயம், படத்தில் நடிக்கப் புது முகங்கள் தேவை என்ற விளம்பரம் அவள் பெண் நெஞ்சத்தில் பால் வார்த்தது. பலதரப்பட்ட போஸ்’களில் புகைப்படத்தை அனுப்பினள். எதிர்காலத்தின் புகழுக்கு முகமன் கூறி வெற்றியுடன் பதில் வந்தது. கிளம்பினள். திரையுலகம் ஊக்கமூட்டி வரவேற்றது. கோகிலம், மிஸ் மாயாவாக மாறினுள்-அதாவது, மாற்றப்பட்டாள்! ஆண்டவனது சிருஷ்டி மேதைக்கு மாயா ஒர் உன்னத எடுத்துக்காட்டு. அவளுடைய அழகின் தேஜஸ், அருவியின் மெல்லிய ஓசைபோல் சிரிக்கும் பாணி, தன் பாகத்தை உணர்ந்து செவ்வனே நடிக்கும் லட்சியம்-இவை அவள் மேதைக்கு முத்திரையிட்டன. அதன் காரணமாக டைரக் டரது அன்பிற்குப் பாத்திரமானள். டைரக்டர் சந்திர மெளலி இளம் வயசு, எம். ஏ. பட்டதாரி. சிறந்த கலா ரசிகர். மாயாவைத் தான் எடுக்கும் முதல் படத்திலேயே எப்பாடு பட்டும் பிலிம் ஸ்டா’ராக்கி விடுவதென்று திட்ட மிட்டிருந்தார். 'அன்னே பூமி என்ற படம்தான் அவருடைய முதல் சிருஷ்டி. தானே வில்லன் பாகமேற்று நடித்தார். பொது மக்களின் உள்ளத்தை எளிதில் கவரத்தக்க முறையில் காமிக், தேசீயம், ஹிந்தி ட்யூனில் அமைக்கப்பெற்ற பாட்டுக் கள் போன்ற தந்திரங்களைக் கையாண்டார். வெற்றி கிடைத்தது எதிர்பார்த்ததற்கு மேல். மாயாவின் புகழ் உச்சிமேவிற்று. பத்திரிகைகள் மாயாவைப்பற்றிப் பத்தி பத்தியாக எழுதின. இவ்விதம் மாயாவை மருவி வந்துகொண்டிருந்த மதிப் பையும், புகழையும் கண்ட டைரக்டருக்கு அவளைத் தன் துணைவியாக்கிக்கொள்ள ஆவல் பிறந்தது. விஷயத்தைப் பிரஸ்தாபித்தார். மாயாவிற்கும் அந்த எண்ணம் சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/62&oldid=765036" இலிருந்து மீள்விக்கப்பட்டது