பக்கம்:கடல் முத்து.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岱6 கடல் முத்து ஆளுல் அவள் குற்றவாளியா? ஒருக்காலுமில்லை. மனமறிந்த விதமாக அவள் யாருக்கும் குந்தகம் விளைவிக்க வில்லைதான். டைரக்டர் அவளை ஏமாற்றிவிட்டார். எப் படியும் டைரக்டரது கபடவேஷம் வெளிப்படக் காலம் வழி வகுக்கும் என்ற திடநம்பிக்கையில் மனம் தேறினள். அத் துடன் டைரக்டரது சகவாசத்தை எவ்விதத்திலும் ஒடுக்கி விட முடிவு செய்துவிட்டாள். ஸ்டுடியோ ஞாபகம் அப்பொழுதுதான் வந்தது. புறப் பட்டாள். அவள் உள்ளம் சாந்தி நிறைந்தது. இமைப் போதில் புயல் கிளம்பிற்று. புயல் வீசியது. பின்னர் புயல் அடங்கி அமைதி. ஆம்: விந்தைதான்! ஜோதிநாத்தை மாயாவிற்கு அறிமுகம் செய்து வைத் தார் டைரக்டர். ஆனல் அந்த முதல் சந்திப்பில் இரு நடிகர்களிடையேயும் கனிந்த கனவின் மயக்கத்தை ஜாடை யாக கவனித்துவிட்ட டைரக்டருக்கு என்னவோபோல் இருந்தது. இருந்தும் வெளிக்காட்டிக்கொள்ள இயல வில்லை. ஒரு சில தினங்கள் தேய்ந்தன. மாயாவும் ஜோதி நாத்தும் நெருங்கிப் பழகினர். டைரக்டரது வஞ்சகத் திற்குப் பரிகாரமாக ஜோதிநாத்திடம் ஏற்பட்ட பரிச்சயம் புனிதத்தன்மை வாய்ந்தது என எண்ணிப் பூரித்தாள் மாயா. தன் இதயத் தாமரையை மலர்விக்கச் சக்திபெற்ற பிரேமைக் கதிர்கள் ஜோதிநாத்திடமே நிலவியுள்ளன என் பதையும் நிர்ணயித்துக் கொண்டாள். - அன்றுதான் மாயா மோஹினி படத்தின் ஷல்ட்டிங் ஆரம்ப தினம். - குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேரவேண்டிய மாயாவும் ஜோதிநாத்தும் இன்னும் வரக்காளுேமே என்று எண்ணிய டைரக்டர் சந்திரமெளலிக்கு அவர்கள் மீதிருந்த சந்தேகம் வலுத்தது. டைரக்டருக்கு ஜோதிநாத் பேரில் ஏற்கெனவே ஒரு கண் உண்டென்பதை அவர் அறிவாரோ என் னவோ? ஆல்ை மாயா நன்கு அறிவாள். அத்தகைய ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/65&oldid=765039" இலிருந்து மீள்விக்கப்பட்டது