பக்கம்:கடல் முத்து.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கடல் முத்து ஏன் மன மாளிகையை இன்பமயமானதாக நிர்மாணிக்க என் பெண் மனம் ஒருபோதும் இடம் தராது.” - - மிஸ் மாயா இப்படிப் பேசிள்ை. அவளேதான் கண் டித்துப் பேசினள். பெண்மை முன்னின்று பேசியது. அந்தப் பேச்சிலே உக்கிரம் உதயமானது. பிறகு அன்று வந்த கடிதத்தையும் அவரிடம் நீட்டினள். டைரக்டர் ஸார், தாங்கள் என்னை இத்துணை தூரம் முன்னேற்றுவித்தமைக்கு என் நன்றியும் வணக்கமும். ஆளுல், புதுப்பட ஒப்பந்தத்தை விட்டு நானும் இப் பொழுதே விலகிக் கொள்கிறேன். மன்னியுங்கள் என்று கூறிய மாயா விர்'ரென்று கிளம்பினுள். ஜோதிநாத் அவ களப் பின்பற்றிஞன். - மாயாவின் இத்தகைய-கனவில்கூட எதிர்பாராதமுடிவை நினைத்து மனம் ஒடிந்த டைரக்டர், மாயா சென்ற வழியில் பதித்திருந்த விழியைத் திருப்பினர். கையில் பிரித்திருந்த கடிதத்தைத் திரும்பவும் பார்த்தார். அவர் கண்களில் கண்ணிர் பிரவகித்தது. மறுகணம் அப்படியே சிலையாய்ச் செயலிழந்து அமர்ந்துவிட்டார் சந்திரமெளலி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/67&oldid=765041" இலிருந்து மீள்விக்கப்பட்டது