பக்கம்:கடல் முத்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கடல் முத்து மூட்டையை இதம் பதமாகத் தோளில் சாய்த்துத் தலைமுண்டாசுக்கு அணைவாக வைத்துக்கொண்டு காளி முன் சென்ருன். குமாரசாமிக்கு அவனையும் அறியாமல் காளியிடம் அனுதாபம் சுரந்தது. வழிப்பயணத்துக்குப் பேச்சு இருந்தால் தொலை - துரம் தோன்முதல்லவா? காளியின் வாயைக் கிளறிவிட்டால் ஒருகால் அவனைப்பற்றி ஏதாகிலும் விருத்தாந்தம் புறப்படுமென்ற ஆவல் குமார சாமிக்கு. மறு வினடி அவன் இதய சபலத்தைத் துழாவி யறிந்தவனுட்டம் காளியே முதலில் பேச வாய் தூக்கினன். 'அண்ணுச்சி, என்ன இப்படி ஒண்டியாய்ப் புறப்பட் டிங்க? ஆளு முடிச்சைப் பார்த்தாப் பெலமாக் கனக்குது. வேறு யாரும் உங்க சம்சாரம், பிள்ளைகுட்டி யாராச்சும் வருவாங்களா? அல்லது முன்னுடியே போயாச்சா?* இது காளியின் கேள்வி. சற்றே மறந்திருந்த ஏதோ ஒன்றை அவன் நினைவு படுத்திவிட்டவன் போலக் கணநேரம் குமாரசாமி பேசா திருந்தான். 'காளி, எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. ஆன. என் தங்கச்சிக்கு முதலிலே கல்யாணம் கட்டினப்புறம்தான் என்னைப்பற்றி யோசிக்கணும். தங்கச்சியையும் அம்மா வையும் காலம்பற வண்டிக்கு ரயிலேற்றிவிட்டேன். அவ சரமா ஒரு காரியம் எனக்குத் தலைமேலே இருந்துச்சு. அதாலே நான் அவங்களோடு போக வாய்க்கல்லே. எனக் காகக் கrத்துக்கிட்டிருப்பாங்க. சொந்தக்காரங்க வீட்டிலே ஒரு சடங்கு. அதுக்குத்தான் போறேன்' என்று குமார சாமி கூறிஞன். ஊம் கொட்டிக் கேட்டான் காளி. குறுக்கிட்ட ஆற்று மணலைத் தாண்டிச் சென்ற சமயம் கூப்பிடு தூரத்தில் குபுகுபு வென்று தீப்புகை மண்டலம் மேகத்தை எட்டிப்பிடிப்பது போன்று பரவி வந்ததைக் கண்ட குமாரசாமி, வேடிக்கை மாதிரி அக்காட்சியைக் காளிக்கும் காண்பித்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/69&oldid=765043" இலிருந்து மீள்விக்கப்பட்டது