பக்கம்:கடல் முத்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவிலே வாழ்வு 7 7 வந்ததுதொட்டுச் சோம்பிய முகத்துடன் சதா காணப்பட்ட தைக் கவனித்த சின்னேயா பெரிதும் வேதனைப்பட்டான், அவ்வூர் மணியக்காரர் வீட்டுக்கு நடையாக நடந்து அவர் மூலம் மாரியைச் சமாதானப்படுத்த முயற்சித்தான்; எப் படியும் தன் தங்கை திரும்பவும் அவள் புருசனிடம் ராசி யாகிவிட்டால்தான் நிம்மதிப்படுமென்று எண்ணம் அவ னுக்கு. ஆனல் அவன் ஆசை நிறைவேறவில்லை. வள்ளி யைப்பற்றி இனிப் பேசிப் பயனில்லை என்பதாகக் கூறி விட்ட மாரியின் முடிவைக் கண்டு அதிர்ந்துபோய்விட் டான் சின்னேயா, அன்று முழுதும், வள்ளி முகம் வீங்க அழுது தீர்த் தாள். தன் வாழ்க்கைச் சூரியன் இங்கனம் அஸ்தமித்துப் போகுமென்று அவள் எ ப் ப டி நினைத்திருக்கக்கூடும்? ஆளுல் அந்த ஒரு நாள்-காதல் வாழ்வின் தொடக்கத்திற் குச் செப்பனிட்ட புனித சம்பவத்தை வள்ளி என்றுமே மறக்கமாட்டாள்! கிராமமே பரபரப்பாகக் காட்சியளித்தது. ஆடவரும் பெண்டிரும் குழந்தைகளோடு கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். அன்று அம்மன் கோவில் கடைசித் திருவிழா; ஆகவே பலவித வேடிக்கைகளைப் பார் த் து மகிழுவதற்கு ஜனங்கள் திரள் திரளாகக் கூடியிருந்தார் கள். பலகாரக் கடைகளைச் சூ ழ் ந் து சிறுவர் கூட்டம் மொய்த்துநின்றது. இளங் காதலர்கள் பரஸ்பரம் பட்சணங் கள் வாங்கிப் பரிமாறிக்கொண்டார்கள். அம்மன் கோவில் திருவிழாவிலே அழகு உலாப் பாடப்போவதுபோலச் சீவிச் சிங்காரித்துக்கொண்டு போளுள் வள்ளி, சுற்றுப் புறங்களைப் பொறுத்தமட்டில் அவள் எடுப்பான பெண் என்று பெயர். அந்தி மயக்கம் அவள் கண்களில்; அழகு மயக்கம் அவளது எழில் முகப்படுதாவில்: கனவு மயக்கம் புன்னகை நெளியும் இதழ் ஒரத்தில், ஆக அவள் மயக்க உரு; அது வள்ளி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/86&oldid=765062" இலிருந்து மீள்விக்கப்பட்டது