பக்கம்:கடல் முத்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புண்ணியம் ஒன்று 89. "ஐயையோ!' என்று வீரிட்டாள் பவளக்கொடி. இந்தப் பாவியை நீங்க ஏங்க காப்பாத்தினிங்க மச்சான்காரவுகளே?” கண்ணிரும் கம்பலையுமாகக் கேட்டாள். பயத்தால் முகம் வெளுக்கத் தேம்பினன் சக்திவேல். "பவளக்கொடிப் பொண்ணே! வர்ற வெள்ளிக்கிழமை தான் உன் அப்பன்காரர் உன்னேட இஷ்டப்படியே குளமங்கலம் மச்சு வீட்டுப் புதுப் பணக்காரரோட தலைச்சன் மகன் மாணிக்கத்துக்குக் கண்ணுலம் கட்டிக்கொடுக்கப் போருரே! பின்னே நீ ஏனும் சுருக்குப் போட்டுக்கினு தற்கொல் பண்ணிக்கிட முனஞ்சீயாம்?" என்ற கேள்விக்கு எதிர்க் கேள்வி கேட்டான் சக்திவேல். பவளக்கொடி, ஐயையோ... தெய்வமே!’ என்று ஓலமிட லாள்ை. மானம் பறிபோன பின்னே நான் ஏனுங்க உயிர் வாழவேணும் மச்சான்காரவுகளே?’ என்று அலறிள்ை.கொல் லுக் கொலைக்கு அஞ்சாத ஈனப் பொறப்புப் படுபாவி இள வட்டம் எவளுே ஒருத்தன் கொஞ்சம் முந்தி அந்திக்கட்டுக் கழிஞ்ச கும்மிருட்டிலே தாராடிப் பொட்டல் காட்டிலே புல்லுச் செதுக்கிக்கிட்டு இருக்கையிலே, என்ைேட முதுகுப் புறத்தாலே கள்ளத்தனமாய்த் திடுதிப்னு கமுக்கமாய் வந்து லேஞ்சுத் துண்டைக் கிழிச்சு ஒரு பாதித் துணியினலே என் ைேட கண்ணுரெண்டையும் முதலிலே இறுக்கிக் கட்டிப் போட்டு, அப்பாலே கை ரெண்டையும், வாயையும் கட்டி முடிச்சோட முடிச்சாய்ப் பின்னிக் கட்டி முடிஞ்சுப்புட்டு, .. ஐயையோ . . . என்ன . . . நேச மச்சான்காரவுகளே . . .! ஐயையோ . . . நான் மகா பாவி ஆகி.புட்டேனே...! நான் படுபாவி ஆக்கப்பட்டுப்புட்டேனே. . .!" என்று கதறிள்ை. ‘என்ன பாடுபட்டும் அந்தப் பாவி மிருகத்துக்கிட்டேயிருந்து தப்பி என் மானத்தைக் கட்டிக் காப்பாத்திக்கிடவே முடியாமல் பூடுச்சுங்களே அம்மான் மகன்காரவுகளே...! ஐயையோ!' என்று மூச்சடைக்கப் புலம்பினுள் அவள். அவள்-சாட்சாத் பவளக்கொடியேதானே...! "ஐயையோ!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடல்_முத்து.pdf/98&oldid=765075" இலிருந்து மீள்விக்கப்பட்டது