பக்கம்:கடவுளர் போற்றும் தெய்வம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பகுதித் தலைவர் பேராசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை, B. A., B. L., அவர்கள் அணிந்துரை , பழந் தமிழ்நாட்டிலே மாதவர் நோன்பும் மடவார் கற்பும் புலவர் பாடும் புகழ் உடையனவாய் அமைந்தன. கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றால் தமிழ் நாட்டுக் கற்பு நெறி என்று மில்லாததோர் ஏற்றம் பெற்றது. சோழ நாட்டுத் தலை:5கரத்திலே பிறந்து, பாண்டி நாட்டுத் தலைநகரத்திலே கற்பின் அளப்பரிய ஆற் றலைக் காட்டி, சேர நாட்டுத் தலைநகரத்திலே கோயில் கொண்டருளிய கண்ணகியை வீரமா பத்தினி என்றும், மங்கலா தேவி என்றும் இந்நாட்டு மக்கள் போற்றி வருகின்றனர். தமிழகத்திலே தோன்றிய கண்ணகி வழிபாடு அயல்நாடுகளிலும் பரவிற்று. கடல் சூழ்ந்த ஈழ நாட்டில் கயவாகு மன்னன் அவ்வழிபாட்டைத் தொடங்கினான் என்று இளங்கோவடிகள் கூறுகின்றார். அன்று முதல் இன்றளவும் இலங்கையில் கண்ணகித் தெய்வம் அருள் புரிகின்றது. மலை நாட்டிலே மலை யாள பகவதி என்று போற்றப்படும் தெய்வம் கண்ண கியே என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. இன்னும் மங்கலந்தரும் மாண்புடைய கண்ணகியின் பெயரால் - அமைந்த ஊரே ' மங்களூர்' என வழங்குகின்ற தென்பர். ' . இன்னோரன்ன சிறப்பு வாய்ந்த கண்ணகியின் வரலாறு செந்தமிழ்ப் பெருங்காப்பியமாகிய சிலப் பதிகாரத்தில் விரித்துரைக்கப் படுகின்றது. அவ் வரலாற்றின் வாயிலாக மூன்று சிறந்த உண்மைகளை இளங்கோவடிகள் எடுத்துரைத்தார். நீதி தவறிய அரசு நிலைகுலைந்து அழியும் என்பதும், கற்பின் செல் R ja Muthiah Research Library 3rd Cross Road, CPT Campus Tarailari, Chennai - 600 113