பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

23


நடேசன் நினைவுகளிலேயே இலயித்துப் போனவராய், தன் வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அவர் மனம் மிகவும் குழம்பிப்போய் இருந்தது.

‘அப்பா! அப்பா! என்று ஏழெட்டுக் குழந்தைகள் அவரை சுற்றிச் சுற்றி வந்து நின்றன.’

இழுத்துக் கொண்டும். பிடித்துக் கொண்டும். தள்ளிக் கொண்டும் அவரது குழந்தைகள், அவரை பாடாய்படுத்தின. அடம்பிடித்தன.

குழந்தைகளுக்கு அப்பா மேல் அவ்வளவு அன்பு என்று நீங்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது. தங்கள் தந்தையின் மடி, புடைத்துக் கொண்டு இருந்ததால், தின்பதற்கு ஏதாவது இருக்கும் என்ற நம்பிக்கையில்தான். அவர்கள் தந்தையை சிறை பிடித்தது போல, அணைத்துப் பிடித்துக்கொண்டு இழுத்துச் சென்றனர். அடித்து பிடித்தபடி அவர் மடியை இழுத்தார்கள். அவர் அவிழ்த்துத் தருவதற்குள்ளேயே மடி அவிழ்ந்து கொண்டு பொட்டலங்கள் பொதபொதவென்று விழுந்தன. ஆளுக்கு ஒன்றாய் எடுத்துக் கொண்டு. மூலைக் கொன்றாய் பறந்தனர் குழந்தைகள். அவர்கள் பசி அவர்களுக்கல்லவா தெரியும்!

நாடகம் முடிந்தபிறகு கொட்டகைக்காலியாகக் கிடப்பதுபோல, தின்பண்டம் வந்ததும், ஓடி ஒளிந்த