பக்கம்:கடவுள் பாட்டு.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

அந்தி வானச் செம்மையில்உன்
அழகு மேனி தனைக்கண்டேன்
நந்தி கழுத்து மணியோசை
நாதத் துன்றன் குரல் கேட்டேன்
பந்தி வைத்த வெண்சோற்றில்
பரமா உன்றன் அருள்கண்டேன்
சிந்தை பறிக்கும் பூவினில் உன்
சிரிப்பைக் கண்டு கொண்டேனே!

63

பஞ்சும் தீயும் நெருங்குமெனில்
பற்றிக் கொள்ளும் அதுபோலென்
நெஞ்சும் உன்றன் திருவடியும்
நெருங்கிப் பற்றிக் கொண்டனவே
அஞ்சல் அஞ்சல் உனைக்காப்பேன்
யானென் றுரைத் தாய் என்தேவா
தஞ்சம் தஞ்சம் நீயென்று
தானே நானும் வந்துற்றேன்.

64


வெள்ளிக் கிழமை யானாலும்
வியாழக் கிழமை யானாலும்
புள்ளி னங்கள் கூவியெழும்
பொழுதா னாலும் போயடைய
வெள்ளி முளைக்கும் இரவேனும்
வேறெந் நேரம் ஆனாலும்
உள்ளி உன்னைத் தொழுவார்க்கே
ஒன்றும் தீமை கிடையாதே!

65


ஞாலம் முற்றும் உன்னாலே
நடப்ப தென்று நான்கண்டேன்
காலம் அனைத்தும் உன்ஆணை
கடப்ப தன்றென் றறிகின்றேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/27&oldid=1201912" இலிருந்து மீள்விக்கப்பட்டது