பக்கம்:கடவுள் பாட்டு.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55


மலையைப் பார்த்தேன் முன்னொருநாள்
மலைத்து நின்றேன் எம்பெருமான்
அலையை வீசும் கடல்கண்டே
அகம்வேர்த் திருந்தேன் எம்பெருமான்
நிலையைத் தருமுன் திருவருளே
நிறையப் பெற்ற பின்னாலே
மலையும் கடலும் சிறிதாக
மனத்தின் ஊக்கம் பெரிதாச்சே!
168
மண்ண கத்தின் பரப்பைநான்
மதித்தேன் பெரிதாய் ஒருகாலம்
விண்ண கத்தின் விரிவை நான்
வியந்தேன் பெரிதாய் ஒருகாலம்
வண்ணப் பெருமான் உன்னருளே
வாய்க்கப் பெற்ற பின்னாலே
விண்ணும் மண்ணும் சிறிதாக
விரிந்த தென்றன் மனவெளியே!
169
தொலைவில் தொலைவில் நெடுந்தொலைவில்
தூய கதிரோன் இருந்தாலும்
கலையும் இதழால் மலரும்பூக்
களிக்கத் தொட்டு மகிழ்கின்றான்.
விலகும் பற்றால் நெஞ்சகப்பூ
விரிந்து மலரும் போதுன்றன்
அலகில் கருணைத் திருவடியின்
அருள்சேர் ஒளியால் எனைத்தொடுவாய்!
170
எதிர்த்தா ரேனும், நீயொருவன்
இல்லை என்பா ரேனுமுனை
மதித்தா ரிடையே பழித்துரைத்து
மனத்தை வருத்து வாரேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/57&oldid=1211770" இலிருந்து மீள்விக்கப்பட்டது