பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


அளவான தீயால் நன்மையும் அளவு மீறிப் பற்றிப் படர்ந்து எல்லாப் பொருள்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கும் போது தீயால் அழிவும் உண்டாகின்றன. அளவான நல்ல நீரால் நன்மையும் அளவு மீறி வெள்ளமாகப் பெருக்கு எடுக்குங்கால் நீரால் பேரழிவும் ஏற்படுகின்றன. மண்ணால் குடியிருப்பு, உணவுப் பொருள்கள் முதலியன விளைவு முதலான நன்மைகளும், மண் சரிவு நிலநடுக்கம்-நிலப்பிளவு முதலிய தீமைகளும் நேர் கின்றன. எனவே, இம்மூல முதற் பொருள்களால் உண் டாகும் நன்மைகட்காக நன்றி செலுத்தும் வகையிலும், தீமை விளைக்கா திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் வகையிலும், இவற்றைக் கடவுளாகக் கருதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். விண்ணைப் பெண்ணாக்கி ஆகாய வாணி’ எனப் பெயர் தந்தனர். ஆனால் காற்றை ஆண் தெய்வமாக்கி வாயு பகவான் (காற்றுக் கடவுள்) எனவும், நெருப்பையும் ஆண் தெய்வமாக்கி அக்கினி பகவான்’(நெருப்புக் கடவுள்) எனவும் பெயர்கள் ஈந்தனர் நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் (நீர்க்கடவுள்) என்னும் பெயரைச் சூட்டினர் மண் என்னும் முதற் பொருளைப் பெண் தெய்வமாக்கி, பூமாதேவி, நில மடந்தை, மண்மகள் என்றெல்லாம் பெயர்கள் வழங்கினர். பொதுவாக நாடுகள் பெண்பால் பெயர்களாகவே சுட்டப்படுகின்றன. தத்தம் மொழியைத் தாய் மொழி’ (Mother Tongue) என அழைப்பது போலவே, தத்தம் நாட்டைத் தாய்நாடு’ (Mother Land) எனப் பெண்ணாக-அன்னையாக அழைப்பது மக்கள் மரபு. இத்தகைய செய்திகளால், மக்கள் இயற்கையின் அடிப்படையில் பல்வேறு கடவுள்களைப் படைத்து விட்டனர். என்பது புலப்படும்.