பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

சிற்சில நேரங்களில் தாமும் உலகில் மக்கட் பிறவி எடுத்து (அவதாரம் செய்து) மக்களோடு வாழ்ந்து மக்களுக்காகப் பல இன்னல்களையும் துய்க்கிறார் என்பது ஒருவகைக் கருத்து.

கடவுள் உயிர்களைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளி ஐந்தொழில் (பஞ்ச கிருத்தியம்) புரிகிறார். அஃது அவருக்கு ஒருவகைத் திருவிளையாடல் ஆகும் என்பது ஒரு கருத்து.

சிந்தனைக்கு வாய்ப்பு :

இவ்வாறு பலர் பலவிதமாகக் கூறுவனவாகப் பல்வேறு கருத்துகள் சொல்லிக் கொண்டே போகலாம். இனிச் சிந்தனைக்கு வாய்ப்பு தர வேண்டும்.

முன்னோர்கள் எழுதி வைத்துள்ள நூல்களையெல்லாம் மறந்து, அந்நூல்களை அடிப்படையாகக் கொண்டு இப்போது பலரும் கூறும் பல்வேறு கோட்பாடுகளை யெல்லாம் மறந்து, நாம் நம் விருப்பத்தில் சொந்தமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்; தன்னுரிமையுடன் சுதந்திரமாக-ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த ஆய்வுத் துளிகளுள் சில வருமாறு;

கடவுள் உயிர்களுக்காக ஏன் உலகத்தைப் படைக்க வேண்டும்? தனு கரண புவன போகங்களை ஏன் தர வேண்டும்? கடவுள் உயிர்களைப் பிறப்பிக்கவில்லையெனில் தனு கரண புவன போகங்களைத் தரவேண்டிய தில்லையே? நனைத்துச் சுமப்பது ஏன்?

கடவுள் தன்னைப் பிறப்பிக்க வேண்டும் என்று எந்த உயிர் அவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது?-எந்த உயிர் அவரிடம் முறையிட்டுக் கொண்டது? தன்னைப்