பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91



‘வருத்தமா! என்சி வந்த
வாழையே! பெற்ற இந்தக்
குருத்தினிப் பத்தே ஆண்டில்
குமரியாய் நிற்பாள்! நாமோ
கருக்கடை யோடு காதற்
கடைசாத்த வேண்டி நேரும்?
பிறைக்குலப் பெண்ணை முன்னால்
பெறுவது தொல்லை’ என்றார்.

ஆர்வத்தோ டனைத்தெ டுப்பேன்;
அருகினில் கிடத்திப் பார்ப்பேன்;
பார்வையால் அந்தத் தேனைப்
பருகுவேன்; உச்சி மோந்து
வேர்வையைத் துடைப்பேன்; கீரை
விதைக்கண்ணின் அழகை யுண்பேன்;
மார்பினை அதுசு வைக்கும்
மயக்கத்தில் மகிழ்ந்தி ருப்பேன்.

வாணிபம் முடித்து விட்டு
வருகின்ற கணவர் கையில்
ஆணிப்பொன் மேனிச் சிட்டை
அள்ளிநான் கொடுப்பேன்; அந்தக்
காணிக்கை முத்தை ஏந்திக்
கனிவுடன் அணைப்பார்; பின்னர்
பானைத்தேன் என்னை மிக்க
பசியுடன் கண்ணால் பார்ப்பார்.