பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


நிலத்தைக் கீறி வயிற்றை நிரப்பும்
கலப்பை உழவனாய்க் குடிசையில் பிறந்து,
கட்டைச் செருப்பைக் காலில் அணிந்து,
கருவிழி போலக் கனிந்து மிகச்சுவை
தருகின்ற திராட்சைக் கொடிப்பந்த லின்கீழ்த்
தையல் புரியுமென் தையலோ டமர்ந்து,
தோளில் குழந்தைகள் ஏறி மிதிக்க
வாழும் எளிய வாழ்வையே விரும்புவேன்.

உண்மையாய் விரும்பும் உன்றன் மனைவி
காலக் கொடியவன் கைகளில் சிக்கிக்
கோலம் சிதைந்து குன்றுவதில்லை.
சிலைப்பளிங் கைப்போல் இருக்கும் அவளுடல்
அலைச்சுருக்கத்தால் தளருவ தில்லை.
திரையெழுந் தாடும் கருநிறக் கூந்தல்
நுரைநரை யாகி விழுவது மில்லை !
நாட்டியக் கால்கள் நடுங்குவ தில்லை.
அவளும் அவ்வாறே தான் பெற்ற கணவனை
மணந்தநன் னாளில், மயக்கும் விழியுடன்
சதுக்கம் போன்ற சதைச்சுவை மார்புடன்
தண்ட வாளத் தடந்தோட் கையுடன்
கண்டது போல என்றும் காணுவாள்.

வாழ்க்கையில் அந்தி வந்த காலத்தும்
பேசும் சிட்டுப் பேரக் குழந்தைகள்
தாவிக் குதித்துத் தழுவும் போது,
கிழமர மாகிக் கிடப்பவர் மீண்டும்
இளமர மாகி இன்பம் தளிர்ப்பர்!