பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


மாமரத் தோன்த ளிர்த்து
மறுபிறப் பெடுத்தான் : புன்னைப்
பூமரத் தோன்வி ரிந்து
புதுப்பணக் காரன் ஆனான்,
காமனைக் கணைமுறித்துக்
கடத்திய நானோ, இந்நாள்
ஏமாற்றக் கன்னி யானேன் ;
இலையுதிர் கால மானேன்.

சலிக்காத விருப்பக் காதற்
சாப்பாடு சலிப்ப துண்டா?
மலைக்கோட்டுப் பரிதித் தீயை
மழைவந்து நனைப்ப துண்டா?
அலித்தன்மை வண்டுக் குண்டா
அல்லிப்பூக் குளத்தில் ? இன்று ,
புலித்தென்றல் போராட்டத்தைப்
பொறுக்கவா ? இறக்க வா நான் ?

படுக்கைவேல் குத்தும் ; பட்டுப்
பஞ்சணை இன்றைக் கேனோ
முடிச்சுமுள் நெரிஞ்சி யாகி
மூன்றுகொம் பாலே முட்டும்.
அடிக்கடி துருத்தி நெஞ்சம்
அனற்காற்றை ஊதும் ; வந்து
கடிக்குமே பிரிவுப் பாம்பு!
கட்டாயம் அழிந்து போவேன்.