பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

காவிரி புணரும் நீங்கள்
கங்கையைப் புணரு தற்கே
ஆவலேன் கொண்டீர் ? கொண்டால்
அதைவெளிப் படுத்த லாமா ?
சேவலின் கொக்க ரிப்புத்
தெரியாத கோழி யா நான் ?
கோவலர் கூற்றை யாழைக்
கொண்டுநான் மறுக்கப் பார்த்தேன்.


மாதவிக் கொடிப டர்ந்த
மஞ்சத்தை மற்றொ ருத்தி
பாதியாய்க் குறைக்க வந்தால்
பார்த்துக்கொண் டிருப்ப னோநான் ?
வேதனை நெருப்புக் குன்றம்
வெடித்தது : மூடி யாலே
மாதுநான் அதைய டக்க
மனங்கொண்டேன் ; தோல்வி கண்டேன்.


கட்டிவில் இருக்கும் போதென்
கால்களைப் பொறுத்தீர் ; யாழைத்
தொட்டின்று தவறு செய்த
தொடிக்கரம் பொறுத்தால் என்ன ?
வெட்டுக்கள் இன்றி ஏது
விழுப்புண்கள் ? பூச வின்றித்
தொட்டுச்சு வைக்குங் கா தல்
சுறுசுறுப் படைவ துண்டா ?