பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


நமக்காகக் கவிதைக் காதல்
நடத்திமனீர். அதைப் படித்துத்
தமக்காக என நினைத்துத்
தம்முடை நெகிழ்ந்தார் பெண்கள்.
சிமிழ்க்கின்ற கண்ணில் உம்மைச்
சிறைசெய்தார்; பொறாமை யாலே
‘சுமைச்சுவைக் கவிதை இந்தச்
சுள்ளியின் மேலா?’ என்றார்.

கண்மணி என்றீர்; தேவ
கன்னியென் றுயர்த்தி வைத்தீர்;
அண்மையில் கிடத்தி என்மேல்
அணுச்சோத னைகள் செய்தீர்.
உண்மையைக் கூறு கின்றேன்;
உம்மீது வெற்றி கொண்ட
பெண்மையைப் பெற்ற தாலே
பெருமிதம் மிகவும் கொண்டேன்.

தொடுவதும் உங்கள் மார்பில்
தோய்வதும் குற்ற மென்றால்
அடிக்கடி அதனைச் செய்ய
ஆவல்நான் கொள்ளு கின்றேன்.
நொடிக்கொரு தரம்சி ணுங்கி
நோய்தரும் எனது நெஞ்சை
அடக்கநான் முயன்று பார்த்தேன்,
அதற்குதான் அடங்கி விட்டேன்.