பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77


முதலில் நெப்போலியன் அவளை ஆட அழைக்கிறான் ; பின்னர்க் கூட அழைக்கிறான். முதலில் மருண்டு பார்த்த அம்மார்புமான், பின்னர் இவன் மடியில் நிரந்தரமாகச் சுருண்டு விழுந்து விடுகிறது. அவளுக்கு அவன் அனுப்பிய எண்ணத்தேர் இங்கு எழுத்தலங்காரம் பெறுகிறது.


முதல் மனைவி ஜோசபைன் நெப்போலியனை விட மூன்று வயது மூத்தவள். அவளால் ஈடு கொடுக்க முடியாத இவன் இளமைப் பசியை, இவ்வாடு மயில் தீர்த்து வைக்கிறாள். இப்பயன் உழவு, அவர்களுக்கு ஒர் ஆண்மகவை அறுவடையாக்குகிறது. இந்நெப்போலிய நிழல் எதிர்காலப் பிரெஞ்சு அரசியலில் பிரபுச் செல்வாக்குப் பெற்றதோடு, ‘லீஜியன் ஆஃப் ஆனர்’ (Legion_of Honour) என்னும் பெருஞ் சிறப்பையும் பெற்று வாழ்க்த்து.


விருந்தருந்த வந்தவளே ! நீயே என்றன்
விருந்தாகச் சம்மதமா ? என்னைச் சுற்றிப்
பறந்துபறந் தாடிவந்த பார்வைப் பேச்சுப்
பாவாடைப் போலந்து மயிலே ! மேரி !
மறந்துவிடும் பெருளா நீ? இறங்கித் தூண்டும்
மாணிக்கச் சுரங்கம் நீ! சொந்தச் சோதி
நிறைநிலவு மண்டிலம் நீ ! நீநீ ! என்றன்
நினைப்பும்நீ ! நினைப்புநிழற் கனவும் நீயே !