பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


மணவறையில் அமர்ந்தவுடன் நெருங்கி உட்கார்
மடமானே! என்றொருத்தி நெருக்க லானாள்.
மணமகனை அவ்வாறே நெருக்க, அந்த
மாணிக்கக் குன்றின்மேல் மோதிக் கொண்டேன்.
எனையாள வந்திருப்பார் மணக்கோ லத்தில்
எப்படித்தான் இருப்பாரென் பதனைக் காணக்
கணையோர விழியாலே குனிந்து பார்த்தேன்;
கையாலே ஒருதோழி இடிக்க லானாள்.


நூறு ரூபாய்கொடுத்துச் சடங்கை யெல்லாம்
நொறுக்கிவிட்டுத் திருமணத்தை நடத்தி வைக்க
ஈரோட்டுப் பெரியாரை அழைத்தி ருந்தார்
என்தந்தை செந்தில்வேல்; அவர்க்குப் பின்னால்
ஆராரோ வாழ்த்துரைத்தார்; அவற்றை யெல்லாம் அரைகுறையாய் நான்கேட்டேன்; அருகில் உள்ள
போரேற்றை உள்ளத்தில் நினைத்த வண்ணம்
புதுக்கனவில் திளைத்திருந்தேன்; காதா கேட்கும்


விருந்துண்ண வாவென்றார்; எழுந்து சென்று
வெறுஞ்சோற்று நஞ்சுண்டேன்; வான வட்டப்
பருந்துசென்று மறையாதா மேற்கில், என்று
பதைப்போடு காத்திருந்தேன்; தவில டிப்போன்
பெருந்துன்பம் காதுக்குச் செய்தான்; பெண்கள்
பேச்சாலே பெரும்புயலை வரவ ழைத்தார்;
வருந்தென்றல் வாழ்த்துரைக்க மாலைக் காலம்
வந்தவுடன் தோழியர்கள் கிசுகி சுத்தார்.