பக்கம்:கடை திறப்பு, கவிதை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


எத்தனையோ புதுக்கேள்வி கேட்டார்; இன்னும்
என்னென்ன மோசெய்தார்; ஆனால் நானோ
அத்தனைக்கும் ஊம்என்றும் ஊகூம் என்றும்,
அரைச்சத்தம் முழுச்சத்தம் கொடுத்தேன்; காதற்
புத்தகத்தின் முகவுரையை அவர்மு டித்துப்
புதுமொட்டின் புறவிதழை நீக்க லானார்,
மத்தாப்புப் போல்நாணச் சிவப்பால் மேனி
மாறிவிட்டேன்; சடக்கென்று விளக்க ணைத்தேன்.


மின்னற்பூச் சிரிப்பதுபோல் எம்மைப் பார்த்து
மேலிருந்த சிறுவிளக்குச் சிரிக்க, இந்தக்
கின்னரத்தை அவர் மீட்ட லானார்: யாரோ
கேலிசெய்து சிரிக்கின்ற சத்தத் தாலே
என்னுள்ளம் திடுக்கிட்டேன்; கதவின் ஒரம்
இருப்பாளோ தோழியென்று நினைத்தேன்;இல்லை
சின்னவிரல் மீதிருக்கும் சதங்கை மிஞ்சிச்
சிரிப்பென்று நானதனைக் கழற்றி வைத்தேன்.


தைமாதம் திருமணத்தை நடத்துகின்ற
தழிழர்களை நான்போற்றுகின்றேன்; தண்ணீர்ப்
பொய்கையெல்லாம் நடுங்குகின்ற இந்த நாளில்
புதுக்கணப்புப் பபோட்டப்படி இரண்டுபேரும்
ஐம்புலனை ஒருபுலனாய் ஆக்கும்போரில்
அரையிரவைக் கழித்துவிட்டோம்; விட்டு விட்டுப்
பெய்கின்ற மழைபோல எஞ்சி நின்ற
பின்னிரவைக் கழித்தபடி உறங்கி விட்டோம்.