பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


இக்கோவில் கி. பி. நான்காம் நூற்றாண்டில், உரோமானியப் பேரரசராக விளங்கிய கான்ஸ்டன்டைன் (Constantine) என்பவரால் கட்டப்பட்டது. மிகவும் தொன்மையான கிறித்தவக் கட்டடக் கலைக்கு இக் கோவிலே சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. கி. பி. பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரையில் மேலை நாட்டுக் கிறித்தவர்களுக்கு இதுவே தலைசிறந்த தேவாலயமாகக் கருதப்பட்டது. கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மறுமலர்ச்சியினால் மக்கள் உள்ளத்திலும், கலை உலகிலும் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்தன. எனவே புனித பீட்டர் தேவாலயத்தைக் காலத்திற்கேற்ப மாற்றிப் புதுப்பிக்க விரும்பினர்.

தேவாலயத்தைப் புதுக்கும் திருப்பணி கி. பி. 1506 ஆம் ஆண்டு துவங்கியது. இவ்வாண்டில் துவங்கிய திருப்பணி 120 ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது. இக் கோவிற் புதுக்குத் திருப்பணி முதன் முதலாக, பிராமண்டி என்ற ஒரு சிற்பியின் கையில் ஒப்படைக்கப்பட்டது. அவர் கோவிலின் ஒரு பகுதியை விரிவு படுத்தினார். எட்டாண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. கி. பி. 1514 ஆம் ஆண்டு அவர் இறந்ததும் கோவில் திருப்பணி சில ஆண்டுகள் தடைப்பட்டு நின்றது; முப்பது ஆண்டுகள் கழித்து மீண்டும் தொடர்ந்தது. இம்முறை கட்டட வேலையின் பொறுப்பை மேற்கொண்டவர் மைக்கேல் ஆஞ்சலோ என்ற மாபெரும் சிற்பி, மேலைநாட்டுச் சிற்பக் கலையின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக விளங்கியவர் இவரே. இவர் விரிவான திட்டமிட்டுப் பீட்டர் தேவாலயத்தைப் பெரிதாக