பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108


குறுக்கே இரும்புக் கம்பிகளை வைத்து 'வலுப்படுத்தப்பட்ட காங்கிரீட்டு' செய்கிறார்கள். காங்கிரீட்டு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கட்டடக் கலையில் வியக்கத்தக்க மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூண் தாங்கும் கட்டடங்கள் (Column frammed structures): மேற் கூரையின் பளுவைத் தூண்கள் பகிர்ந்து கொள்ளுதலே இக்கட்டடத்தின் சிறப்பியல்பாகும். மதுரைத் திருமலை நாயக்கர் மகாலும், சிதம்பரத்திலுள்ள ஆயிரங்கால் மண்டபமும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். ஆனால் இவ்விரு கட்டடங்களிலும் நாட்டப்பட்டுள்ள பெரும் பெரும் தூண்கள் இடத்தைப் பெரிதும் அடைத்துக் கொண்டிருக்கின்றன. வலுப்படுத்தப் பட்டுள்ள காங்கிரீட்டு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தூண் தாங்கும் கட்டடங்கள் மிகவும் பிரபலமடையத் தொடங்கி யிருக்கின்றன. வலுப்படுத்தப்பட்ட காங்கிரீட்டுகளைக் கொண்டு சிறிய தூண்களை அமைத்து, எங்கெங்கு மறைப்புச் சுவர்கள் தேவையோ அங்கெல்லாம் மிகவும் அகலக் குறைவான சுவர்களைக் கட்டிவிடுகிறார்கள். பல பெரிய கடைகள், தொழிற்சாலைகள் முதலியன அமைப்பதற்கு இக்கட்டட முறை பெரிதும் பயன்படுகின்றது.

பிரித்தமைக்கும் கட்டடங்கள் (Collapsible buildings): இக்கட்டடங்கள் மேலை நாடுகளில் நடுத்தர வகுப்பினராலும், அலுவலகங்களில் வேலை செய்வோராலும் பெரிதும் விரும்பப்படுகின்றன. இக்கட்டடங்கள் பல மூலைத்தூண்களாலும்,