பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

போர், பருத்தியாடை தைப்போர், காலாடை தைப்போர், மேலாடை தைப்போர், தடித்த ஆடை தைப்போர், மெல்லிய துகிலாடை தைப்போர், மகளிர்க்கு ஆடை தைப்போர், உடலோடு பொருந்திய ஆடை தைப்போர் எனப் பல பிரிவினர் இருந்தனர். அரச குடும்பத்தார் பெரும்பாலும் வெண்மையான ஆடைகளையே உடுத்திக் கொண்டனர். இவ்வாடைகளைச் சலவை செய்வதற்கென்று பணியாளர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

“பலவிதமான பொன்னணிகளையும், வைர மிழைத்த நகைகளையும் அரச குடும்பத்தார் அணிந்திருந்தனர்; பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளுக்கேற்பப் பலவித நகைகளை அணிந்தனர். அரசிகளுக்கு நூற்றுக் கணக்கான பணிப்பெண்டிர் இருந்தனர். உள்ளத்தில் சலிப்பேற்பட்ட நேரங்களில் இசைக் குழுவினர் இன்னிசை எழுப்பி அரசியரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினர். ஆடற்பெண்டிர் ஆடல் நிகழ்த்தினர்; கோமாளிகளும் குள்ளர்களும் கேளிக்கை காட்டி வேடிக்கை புரிந்தனர்.

“அரச குடும்பத்தினர்க்கு நகை செய்வதற்கென்று அரண்மனையின் அருகே ஒரு பட்டறையே இருந்தது. பொற்கொல்லர்களும், கல்லிழைக்கும் பணியாளரும், கருமாரும் உலைக் கூடத்தை விட்டு அகலாது பணி புரிந்தனர். விடிந்தது முதல் இரவு நெருங்கும் வரை உலைக்கூடத்தில் நெருப்படியில் காயும் இப்பாட்டாளிகள் பெற்ற கூலி மிகமிகக் குறைந்ததுதான்.

கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த கல் தச்சர்களின் நிலையோ மிகவும் இரங்கத்தக்கது. வெயிலி-